ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியை சார்ந்த ஒரத்தநாடு புதூர் கிராம அரசினர் மேல்நிலை பள்ளியில் இயக்கபடாமல் முடிகிடந்த கணினி பயிற்சி மற்றும் காணொளி அறையை அப்பகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர முடிவுசெய்யப்பட்டு, அங்கு பழுதாகி பயன்படுத்தமுடியாத நிலையில் இருந்த 10 கணினிகளை மறுசிரமைப்பு செய்து, மாணவர்களுக்கு கணினி பயிற்சியை இலவசமாக வழங்க கணினி ஆசிரியை ஒருவரை நியமித்து அவருக்கு மாதந்தோறும் நாம் தமிழர் கட்சி புதூர் சார்பில் ஊதியம் வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கென்று எந்த ஒரு தொகையும் மாணவர்களிடமோ பள்ளியிடமோ பெறாமல் இலவசமாக நாம் தமிழர் கட்சி புதூர் உறவுகள் செய்துகொடுத்துள்ளனர்.
முகப்பு கட்சி செய்திகள்