சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை ஒன்றிய கிளை நிர்வாகிகள் நியமனம்

81

31-07-2016 அன்று சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட கிராமப் பாஞ்சாயத்துக்களான நகரமங்களம், என்.மணக்குடி, கீழ உச்சாணி, துதிகனி, பள்ளபச்சேரி, சுண்டுரணி, ஆளன்வயல், கடம்பாகுடி, எஸ்.புதுக்கோட்டை, பொன்னனிக்கோட்டை, காவதுகுடி, உறுதிக்கோட்டை, கைக்குடி, இன்பவயல், விளங்காட்டூர், பொன்னக்கரை, முப்பையூர், உரக்கூர், கிளியள், தேவக்கோட்டை நாகராட்சிக்குட்பட்ட வார்டுகள் 1, 4, 5, 8 நடராஜபுரம் காரைக்குடி நாகராட்சிக்குட்பட்ட வார்டுகள் 29 பர்மா காலனி உள்ளிட்ட பகுதிகளின் கிளை நிர்வாகிகள் நியமனம், தலைமை நிலையச் செயலாளர் தங்கராசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை தொகுதி மாவட்டச் செயலாளர் சாயல்ராம் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர் புரட்சிதமிழன் மற்றும் பொறுப்பாளர் ஜான் செய்தார்.