நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் வி.எழிலரசி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் 31-03-2024 அன்று காரைக்குடி, திருப்புத்தூர், மற்றும் சிவகங்கை அரண்மனை அருகில் வாக்கு சேகரித்து பரப்புரை மேற்கொண்டார். மேலும், நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ள வீரபெரும்பாட்டன்கள் மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட நினைவிடத்தில் உள்ள திருவுருவச்சிலைக்கு, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினார்.