சுனாமி நிவாரண வீடுகளின் பணிகள் நிறைவடையாததால் – வீதிகளின் தாங்கும் மக்கள்

28
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் சுனாமி நிவாரண வீடுகள் பணிநிறைவு பெறாததால், கடும் மழைக்கு மத்தியில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீதியில் சிரமப்படுகின்றனர் .

சுனாமி பேரலையால் பாதிக்கப்பட்ட கடலோர பகுதி மக்களுக்கு உலக வங்கி நிதி உதவியுடன், ராஜிவ் நிவாரண நிதியாக சுனாமி வீடுகள் கட்டும் பணி 2008ல் தொடங்கியது. முதற்கட்டமாக கடற்கரையிலிருந்து 200 மீ., க்குள் பாதிக்கப்பட்ட பயனாளிகளை தேர்வு செய்து, அவர்களுக்கு வீடுகள் கட்டித்தர முடிவு செய்யப்பட்டது. இதற்காக சேதமடைந்த வீடுகளை இடித்து, அதே இடத்தில் புதிய வீடுகள் கட்டும் பணி தொடங்கியது. ஓராண்டிற்குள் நிறைவு பெறும் என, தெரிவிக்கப்பட்டது. இதற்காக ஒப்பந்தகாரர்களும் நியமிக்கப்பட்டனர்.
ஒவ்வொருவருக்கும் நூற்றுக்கணக்கான வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ராமநாதபுரத்தில் குறிப்பிட்ட சில ஒப்பந்தக்காரர்களை தவிர ஆறு பேர், இன்னும் பணியை நிறைவு செய்யவில்லை. இரண்டு ஆண்டுகளாக குடியேறமுடியாமல் 600க்கும் அதிகமான குடும்பங்கள் தவித்து வருகின்றன. பகலில் வீதிகளிலும், இரவில் கட்டடத்திலும் தங்கி வருகின்றனர். தற்போது மழையின் தாக்கம் அதிகமாக இருப்பதால், வீதிகளில் தங்க சிரமப்படுகின்றனர். இதற்கிடையில், இரண்டாம் கட்டமாக தலா 3.25 லட்சம் ரூபாய் செலவில் 5,400 சுனாமி வீடுகள் கட்டும் பணி இரு மாதங்களுக்கு முன் தொடங்கியுள்ளது. இவர்களும் தங்க இடமின்றி சிரமப்படுகின்றனர்.

முந்தைய செய்திதமிழக அரசின் கல்விகட்டனத்திற்கு எதிரான தனியார் பள்ளிகளின் மறு ஆய்வு மனு தள்ளுபடி
அடுத்த செய்திஇலங்கையில் போர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக இன்று லண்டனில் வழக்குப் பதிவு