செஞ்சி சட்டமன்றத்தொகுதி சார்பாக பெருந்தமிழர் அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளையொட்டி இன்று (30-07-17) தொகுதிக்குட்பட்ட கோவில்புறையூர் கிராமத்தில் மரம்நடும் விழா நடந்தது. இதில் 400 மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும்,பொதுமக்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் அகழ்வான் கணேஷ், மாநில மாணவர் பாசறைச் செயலாளர் கிருஷ்ணன், மதுரவாயல் தொகுதி தலைவர் வாசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நிகழ்வினை மாவட்டச் செயலாளர் சுகுமார், மாவட்டத் தலைவர் வெங்கடேசன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சக்திவாசன், மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் இளவரசன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.