கோவில்பட்டி நகராட்சியின் செவிகொடாத மற்றும் செயல்படாத போக்கை கண்டித்து மாபெரும் முற்றுகை போராட்டம்

31

நீர்வழித்தடங்கள் மற்றும் சாக்கடை ஆக்கிரமிப்புகளை அகற்றிடக்கோரி கோவில்பட்டி நகராட்சியிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் செவிகொடாத மற்றும் செயல்படாத போக்கை கண்டித்து 29-07-2016 அன்று மாபெரும் முற்றுகை போராட்டம் நடைப்பெற்றது


இந்த போராட்டத்தில் கோவில்பட்டி நகரச்செயலாளர் மணிகண்டன் மற்றும் இணைச்செயலாளர் விசயராசு தலைமைவகித்தனர், மேலும் மாவட்ட செயலாளர் இராசேசு கண்ணா, மாவட்ட பொருளாளர் தியாகராசன் மாவட்ட இணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட தலைவர் மகேசு,துணைத்தலைவர் அந்தோணிராஜ், மாவட்ட துணைச் செயலாளர் செண்பகராசு மாவட்ட இளைஞரணி செயலாளர் அருண்குமார், இணைச்செயலாளர் மகேந்திரபிரபு, துணைச்செயலாளர் சந்தோஷ், நகரத்தலைவர் ராமமூர்த்தி, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராசேசு, மேற்கு ஒன்றிய செயலாளர் பால்பாண்டி,ஒன்றியத்தலைவர் செந்தூரபாண்டி, மற்றும் 20 க்கும் மேற்பட்ட நாம்தமிழர்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு பின் உறவுகள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்

முந்தைய செய்திசிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் கிளை நிர்வாகிகள் நியமனம்
அடுத்த செய்திஅப்துல் கலாம் நினைவு மரம்நடும் விழா!