திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதி, திருநின்றவூர், பெரியார் நகரில் பதினைந்து நாட்களுக்கு மேலாக தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று (26-12-15) மாலை 3 மணிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மழைநீரை அகற்றக்கோரி கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் வழங்கினார் சீமான்.
முகப்பு கட்சி செய்திகள்