சோழிங்கநல்லூர் பகுதியில் சாலை அமைத்தார் -சீமான்

82

சோழிங்கநல்லூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மழையால் பாதிக்கப்பட்ட மக்களை ஒரு மாதமாக நேரில் சென்று குறைகளை கேட்டுவந்தார். அப்போது இந்த பகுதியை சார்ந்த மக்களுக்கு சாலை அமைத்து தருவதாக உறுதியளித்தார், அதனை தொடர்ந்து இன்று(29.12.2015) சாலை அமைக்கும் பணியை தொடங்கினார், இதனை தொடர்ந்து கழிவறை கட்டித்தரவும் உள்ளார்.

மக்களுக்கு எந்த அடிப்படை வசதியையும் அரசு செய்துதரவில்லை

ஆதிதமிழர்களை சென்னையில் இருந்து விரட்டி பல பகுதிக்கு அனுப்பிவிட்டனர் அதில் ஒரு பகுதிதான் இந்த ஓடை பகுதி, இங்கு கழிவறை, சாலை என எந்த அடிப்படை வசதியையும் அரசு செய்து தரவில்லை. வெறும் இரண்டாயிரம் வீட்டைக் காட்டி இரண்டு லட்சம் மக்களை காலி செய்ய பாக்கிறது அரசு, ஆனால் இங்கு இருக்கும் மக்கள் கேட்பது நாங்கள் வாழும் இந்த பகுதியிலே வீடு கட்டிகொடுங்கள் என்றுதான் கேட்கிறார்கள், இங்குதான் எங்கள் வாழ்வாதாரம் இருக்கு, இங்கு இருந்தால்தான் எங்களால் ஏதாவது கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தமுடியும். இப்போது இங்கு மக்களுக்கு அத்தியாவசிய தேவை கழிவறையும் சாலையும்தான் தேவைப்படுகிறது.

மக்கள் தேவையை அரசு உடனே பூர்த்தி செய்யாதது ஏன்?

ஜல்லிக்கட்டுத் தடையை நீக்கி ஜனவரி 1ஆம் தேதி நல்ல செய்தி வரும் என்றால் இவ்வளவு நாள் எங்களை போராட வைத்தது ஏன்? உங்களுக்கு அதிகாரம் இருக்கு என்றால் மக்கள் தேவையை உடனே செய்யாதது ஏன்? அப்படியென்றால் தேர்தல் நேரத்தில் நாங்கள் தான் உங்களுக்கு இதை செய்தோம் என்று விளம்பர படுத்திக்கொள்ளதானே இப்படி செய்கிறிர்கள். எது எப்படியோ ஜல்லிக்கட்டு நடந்தால் சரிதான், இல்லையென்றால் தடையை மீறி  நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்.

மிக மோசமான திராவிட கட்சி தே.மு.தி.க தான்

இருக்கும் கட்சிகளிலேயே மிக மோசமான திராவிட கட்சி தேமுதிக தான். திமுகவை அண்ணா உருவாக்கும்போதாவது அதற்க்கு ஒரு கொள்கை இருந்தது ‘இப்போ இருக்கா இலையா என்பது வேறு விடயம்’, அதிலிருந்து பிரிந்த அதிமுகவிற்கு என்ன மாற்று கொள்கை இருக்கு, ஆனால் தேமுதிகவிற்கு என்று எந்த கொள்கையுமே இல்லை. கொள்கை இல்லாத அரசியல் என்பது மிகப் பெரிய பாவம் என்று காந்தியே குறுப்பிடுகிறார். விஜயகாந்த் முதல்வராக உருவானால் கருணாநிதி, ஜெயலலிதாவை எல்லாம் கடவுளாக மக்கள் நினைக்க ஆரம்பித்துவிடுவார்கள். அந்த அளவிற்கு கருணாநிதி, ஜெயலலிதாவை ரொம்ப நல்லவராக உருவாக்கிவிடுவார் விஜயகாந்த்.

இது சுயநல அரசியல்

தி.மு.க மற்றும் காங்கிரஸ் மீண்டும் இணைவது எனக்கு வியப்பு இல்லை, இவர்கள் சுயநல அரசியல் கொண்டவர்கள் என்பதை மீண்டும் உறுதிபடுத்துகிறார்கள். ஒன்பது ஆண்டுகள் காங்கிரஸ் உடன் அமைச்சரவையில் பதவி அனுபவித்துவிட்டு கடைசியில் தி.மு.க காங்கிரசில் இருந்து பிரிந்ததே, ஈழ மக்களின் நலனை காட்டிதான், அப்படியென்றால் இப்போ ஈழ மக்களின் தேவை பூர்த்தியாகிவிட்டதா, பிறகு எதன் அடிப்படையில் மீண்டும் இணைகிறார், அப்படியென்றால் இங்கு வெறும் சுயநல அரசியல் தான் என்பது தெளிவாகிறது. என சீமான் கூறினார்.

முந்தைய செய்திஎழுச்சியோடு நடைபெற்ற அப்துல் ரவூப் நினைவேந்தல் கூட்டம்
அடுத்த செய்திஇராஜா அம்மையப்பன் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்