எழுச்சியோடு நடைபெற்ற அப்துல் ரவூப் நினைவேந்தல் கூட்டம்

87

நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை சார்பாக ‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் வீரவணக்கப் பொதுக்கூட்டம் 27-12-15 அன்று கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காயல் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பங்கேற்று எழுச்சியுரையாற்றினார்.

அப்துல் ரவூப் ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் முதன் முதலாக தன்னைத் தானே எரியூட்டிக் கொண்டவர். தமிழ்நாடு பெரம்பலூரைச் சேர்ந்த 24 வயதான அப்துல் ரவூப், 1995ம் ஆண்டு யாழ்மாவட்டத்திலிருந்து 5 இலட்சம் மக்கள் வெளியேறியபோது தமிழ்நாட்டு அரசிடம் அவர்களுக்கு ஆதரவுக் கேட்டு 15-12-1995 அன்று திருச்சியில் தீக்குளித்தார். இறப்பதற்கு முன், ‘ஈழ மக்களின் துயரம் விரைவில் தீர்க்கப்படாவிட்டால் ஆயிரமாயிரம் அப்துல் ரவூப்கள் எழுவார்கள்’ என்று கூறினார்.

இதில் கரூர் மாவட்டத்தின் நான்கு தொகுதிக்கு வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்தார் சீமான்.

கரூர்-வழக்கறிஞர் நன்மாறன்

குளித்தலை-சீனி.பிரகாசு.

அரவக்குறிச்சி- ‘இயற்கை உழவர்’ அரவிந்த் குருசாமி

கிருஷ்ணராயபுரம்-தவமணி பத்மநாபன்

 

முந்தைய செய்திஆவடி வெள்ளப்பெருக்கு பகுதிகளில் நிவாரணப்பணியில் சீமான்
அடுத்த செய்திசோழிங்கநல்லூர் பகுதியில் சாலை அமைத்தார் -சீமான்