நாம் தமிழர் கட்சி சார்பாக 27-11-15 அன்று கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று எழுச்சியுரையாற்றினார்.
முன்னதாக மாவீரர்களுக்கு சுடர் வணக்கமும், மலர் வணக்கமும், வீரவணக்கமும் செலுத்தப்பட்டது. தமிழீழத் தேசியக் கொடியையும், நாம் தமிழர் கட்சியின் கொடியையும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்றி வைத்தார்.
இறுதியாக புவனகிரி தொகுதி வேட்பாளர் இரத்தினவேல் அவர்களை அறிமுகம் செய்து வைத்தார்.