நாகை தெற்கு மண்டலம் திருமருகல் ஒன்றியம்,மேலவாஞ்சூர் பகுதியில்
06-02-15 அன்று நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் 70-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட கிளை திறக்கப்பட்டது. மாநில தொழிலாளர் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் தசரதன் கொடியேற்றினார். மாவட்டச்செயலாளர் தங்கம் நிறைந்த செல்வம் தலைமை வகுத்தார். நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர்கள் அப்பு, சுரேசு ஒன்றிய செயலாளர்கள் செல்வமணி, செந்தமிழன், பழனி, செல்வகுமார், நல்லசிவம் நகர பொறுப்பாளர்கள் சிவக்குமார், ராசேசு, செல்வகுமார், தினேசு, காரைக்கால் நாகப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.