தூத்துக்குடியில் தெருமுனைப்பரப்புரை

10

தூத்துக்குடி (தெற்கு) மாவட்டம், புன்னக்காயல் கிராமத்தில் தெருமுனை பரப்புரைக்கூட்டம் ஒரு இடத்தில் திட்டமிடப்பட்டிருந்தது.. ஆனால், பரப்புரைக்கு முன்பு பெய்த மழையினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதையொட்டி ஒரு அங்காடி முன்பே சிறு ஒளி வெளிச்சத்தில் பரப்புரை ஒலிவாங்கி இல்லாமலே முன்னெடுக்கப்பட்டது. அமர சிறு இடம் கூட இல்லாத பொழுதும்கூட ஒன்றே முக்கால் மணி நேரம் ஊர் பொதுமக்கள் ஆர்வமுடன் நின்று கொண்டே பரப்புரையில் பங்கேற்றனர். அத்துடன் நாம் தமிழரின் வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு குறித்து நம்முடன் கலந்துரையாடலையும் ஆர்வமுடன் பிறகு மேற்கொண்டனர்.