இலங்கையில் தமிழர்களை இனாழிப்பு வெறியோடு கொலைவெறித் தாக்குதல் நடத்திய, “சிங்கள-பவுத்த வெறியர்களைக்” கண்டித்து தேனி- தொடர்வண்டிப்பாதை தடுப்பு அருகில் 24/06/2014 (செவ்வாய்) நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாடம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி-தேனி மாவட்டம் சார்பாக 2009 ஆம் ஆண்டில் ஈழத்தில் நடந்த தமிழின அழிப்புப்போரில் சிங்கள-பவுத்த வெறி நாடான இலங்கை அரசுக்கு பல்லாயிரம் இராணுவ தளவாடங்களை வழங்கி, பல கோடிக்கணக்கான பண உதவி செய்த இசுலாமய, அரபு நாடுகளுக்கு, “இனிமேலாவது முகமூடி கிழிந்து நிற்கும் இலங்கையின் உண்மை நிலவரத்தைப் புரிந்துகொண்டு, இனிவரும் காலங்களில் இலங்கைக்கு எதிரான நிலப்பாட்டையும், வாக்களிப்பையும் அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது”
தலைமை: மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வடிவேல்
முன்னிலை: தேனி நகர அமைப்பாளர் அன்பழகன்,
உத்தமபாளையம் அமைப்பாளர்: செயபால்,
சின்னமனூர் நகர அமைப்பாளர்: தமிழன் சுரேசு.
மேலும் 50-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி தோழர்களும், இன உணர்வுள்ள பொதுமக்கள் சிலரும் கலந்துகொண்டனர்