நீலமலை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்ட மேடையை சேதப்படுத்திய காங்கிரஸ் கட்சியினரை கண் டித்து எம்.எல்.ஏ. உருவபொம்மைகள் எரிப்பு – 23 பேர் கைது

38
சோனியா, ராகுல்காந்தி,காங்கிரஸ் எம்.எல்.ஏ. போர்வையில் இருக்கும் குண்டர்களை  ஜான் ஜேக்கப் ,பிரின்ஸ்- விஜயதாரணி ஆகியோரின் உருவ பொம்மைகளை நீலமலை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் தீயிட்டு எரித்தனர்.
————————————————————————————————————-
உருவபொம்மைகள் எரிப்பு
கன்னியாகுமரியில் நாம்தமி ழர் கட்சியின் பொதுக்கூட்ட மேடை சேதப்படுத்தப்பட்டது. இதையடுத்து ஜான் ஜேக்கப் ,பிரின்ஸ்- விஜயதாரணி-எம்.எல்.ஏ. உள்பட 400 காங்கி ரசார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நீலமலை மாவட்ட  நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்ட மேடையை சேதப்படுத்திய காங்கிரஸ் கட்சியினரை கண் டித்தும், சாந்தன், பேரறிவா ளன், முருகன் உள்பட 7பேரின் விடுதலையை ரத்து செய்ய கோரி மத்திய அரசு மறு சீராய்வு மனு உச்ச நீதிமன்றத் தில் தாக்கல் செய்திருப்பதை கண்டித்தும் கூடலூரில் நாம் தமிழர் கட்சியினர் ஸ்டேட் வங்கி முன்பு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா, ராகுல் காந்தி ஜான் ஜேக்கப் ,பிரின்ஸ்- விஜயதாரணி- உருவ பொம்மைகளை ஆகியோரின் உருவ பொம்மைகளை கொண்டு வந்து நடுரோட்டில் போட்டு தீ வைத்து எரித்தனர்.
23 பேர் கைது இதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர் ஆனந்த் தலைமையிலான நாம் தமிழர் கட்சியினர் அங்கிருந்து ஊர் வலமாக வந்து பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா, ராகுல் காந்தி ஆகியோரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் 7 பேரை விடுதலை செய்ய கோஷங்களை எழுப்பினார்கள்.
பின்னர் பழைய பஸ் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர் நடுரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடு பட்டனர். இதையொட்டி நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்த், நகர செயலாளர் பைந்தமிழ் பாரதி, இளைஞர் பாசறை பந்தலூர் ஒன்றிய விஜயன், ஒன்றிய இணை செயலாளர் கிளிக்குமார் உள்பட 23 பேரை கைது செய்து வேனில் ஏற்றி திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.