சேலம் தொடர்வண்டி சந்திப்பில் சோனியா உருவபொம்மை எரிப்பு மற்றும் தொடர்வண்டி மறியல் போராட்டம்

32

22.02.2014 அன்று சேலம் தொடர்வண்டி சந்திப்பில் சோனியா உருவபொம்மை எரிப்பு மற்றும் தொடர்வண்டி மறியல் போராட்டம் :

ராஜிவ்காந்தி கொலைவழக்கில் தூக்கு தண்டனை பெற்று 22 ஆண்டுகளுக்கு மேலாக தனிமைச் சிறைக் கொட்டடியில் வாடிப் பல துயரங்களை அனுபவித்து வந்த அண்ணன்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன், அக்கா நளினி மற்றும் அதே சூழ்நிலையில் ஆயுள் தண்டனை பெற்று சிறைக் கைதிகளாக அண்ணன்கள் ராபர்ட் பயாஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் அய்யா பெருந்தமிழர் சதாசிவம் அவர்களால் சரியான தீர்ப்பை வழங்கியதன் தொடர்ச்சியாக தமிழக அரசு தமிழ் உறவுகள் ஏழு பேரையும் சிறையிலிருந்து விடுவிப்பதாக தமிழக சட்ட மன்றத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமையில் தமிழக அமைச்சர் பெருமக்கள் முன்னிலையில் விடுதலை செய்வதாக ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

இதனை எதிர்க்கும் வகையில் சோனியா தலைமையிலான மத்திய காங்கிரசு அரசு தமிழர்களுக்கு துரோகம் விளைவிக்கும் வகையில் ஏழு தமிழர்களின் விடுதலைக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. அதுமட்டும் அல்லாமல் தமிழக முதல்வரின் உருவ பொம்மையை எரித்தும் காங்கிரசு தனது துரோகத்தை தோலுரித்து காட்டுகிறது. தமிழர்களின் விடுதலையை எதிர்க்கும் சோனியா தலைமையிலான மத்திய காங்கிரசு அரசைக் கண்டிக்கும் வகையிலும் தமிழக முதல்வரின் உருவ பொம்மையை அங்கு எரித்தால் தமிழர்களாகிய நாங்கள் எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் சோனியாவின் உருவ பொம்மையை இங்கு எரிப்போம். இதை தொடர்ந்து சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் சி. அருண் அவர்களின் தலைமையில் தொடர்வண்டி மறியல் மற்றும் சோனியாவின் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் பள்ளப்பட்டி சிவக்குமார், இணையம் சிவா, பள்ளப்பட்டி மணி, சூரமங்கலம் பொறியாளர் முருகன், களரம்பட்டி அன்பழகன், அஸ்தம்பட்டி பாண்டியராசன், திருவாக்கவுண்டனூர் பாலசுப்பிரமணியம், சூரமங்கலம் செயந்தன், தமிழ், சீரகாப்பாடி சீவா, கோபிராசா, அன்னதானப்பட்டி பன்னீர்செல்வம், சித்தர்கோவில் ரஞ்சித், கமலக்கண்ணன், எடப்பாடி சீராளன், எடப்பாடி ரமேசு, தாரமங்கலம் மந்தியப்பன், தீவட்டிப்பட்டி மோகன், பாரபட்டி சுதாகர், தானம்பட்டி அண்ணாதுரை, கூனூர் பூபதி, விசயகுமார், அசோக்குமார், மேட்டூர் மணிவேல், தமிழ்மாது, வழக்குரைஞர் ராசா, கொளத்தூர் ஜான், வாழப்பாடி ரமேசு, ரகு, பெத்தநாயக்கன் பாளையம் காசிமன்னன், கெங்கவல்லி ரமேசு, முத்துசாமி மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். போராளிகள் அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பிற்பகலில் விடுதலை செய்யப்பட்டனர்.

முந்தைய செய்திதிருப்பூர் மாநகராட்சி முன் மத்திய அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டம்!
அடுத்த செய்திநெய்வேலி நாம்தமிழர் கட்சியின் சார்பாக சோனியாகாந்தியின் உருவ பொம்மை எரிப்பு