நெய்வேலி நாம்தமிழர் கட்சியின் சார்பாக சோனியாகாந்தியின் உருவ பொம்மை எரிப்பு

51
1987-ம் ஆண்டு இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப்படையினரால் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப் பட்டத்துடன், ஆயிரக்கணக்கான தமிழ்ப்பெண்கள் இந்திய இராணுவ வீரர்களால் கற்பழிக்கப்பட்டதிற்கு காரணமாக இருந்த இராஜீவ்காந்தி 1991-ம் ஆண்டு கொல்லப்பட்டதிற்கு காரணம் என குற்றம் சுமத்தப்பட்டு 23 ஆண்டுங்களாக சிறையில் வாடும் நம் ரத்த சொந்தங்கள்  நளினிமுருகன்பேரறிவாளன்சாந்தன்ராபர்ட் பயாஸ்ஜெயகுமார்ரவிச்சந்திரன் ஆகியோர்களை உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படிவிடுதலை செய்ய தமிழக முதல்வர் 19-02-2014 அன்று தனது அமைச்சரவை மூலம் இட்ட உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை வாங்கி தொடர்ந்து தமிழர் விரோத போக்கை கடை பிடித்து வரும் சோனியா காந்தி தலைமையில் இருக்கும் மத்திய அரசை கண்டித்து நெய்வேலி நாம்தமிழர் கட்சியின் சார்பாக நெய்வேலி நகரம் வட்டம்-19 ல் அமைந்துள்ள தபால் நிலையம் முன்பு இன்று (22-02-2014) காலை 11.30 மணியளவில் கடலூர் மேற்கு மாவட்டத்தலைவர் முத்து.அசோகன், நெய்வேலிநகரச்செயலாளர் மு.ஜின்னா, தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர்கள் பெரியார் பேரன், இரவி,  நகர பொறுப்பாளர்கள்  ஜெயசங்கர், முதனைஅறிவழகன், முருகவேல் , பன்னீர் செல்வம், இளைஞர் பாசறை நிர்வாகிகள் மா.அன்பு செல்வன்,மணி, கோபி வெங்கடேசன், மாணவர் பாசறை அறிவுக்கரசு, திவாகரன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் ஒன்று கூடி சோனியாகாந்தியின் உருவ பொம்மையை கொளுத்தினர்.மேலும் காங்கிரசுக்கு எதிராக தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவும் கடலூர் மேற்கு மாவட்டத்தின் சார்பாக முடிவிடுக்கப்பட்டுள்ளது.
முந்தைய செய்திசேலம் தொடர்வண்டி சந்திப்பில் சோனியா உருவபொம்மை எரிப்பு மற்றும் தொடர்வண்டி மறியல் போராட்டம்
அடுத்த செய்திகடலூர் தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம்.