14-01-2014 பொங்கல் தமிழ்புத்தாண்டு அன்று கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் உள்ள மூகாசபரூர் கிராமத்தில் விருத்தாசலம் ஒன்றிய நாம் தமிழர் கொடியேற்றம்.

189

தை முதல் நாள் 14-01-2014 தமிழர் திருநாள் அன்று விருத்தாசலம் தொகுதியில் உள்ள மூகாசபரூர் கிராமத்தில் விருத்தாசலம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் திவாகர் தலைமையில் நாம்தமிழர் கொடியெற்று நிகழ்வு பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கடலூர் மேற்கு மாவட்ட இளைஞரணி சொயளாளர் இரா. தென்றல் மணி கொடியெற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். மற்றும் இக்கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இரா. அருண் குமார், மரிய சோசப், முருகேசன், சபரிநாதன், மங்களுர் ஒன்றிய  ஒருங்கிணைப்பாளர் சோதி, NLC தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் இரவி ஆகியேர் கலந்துகொண்டனர்.

கூட்டம் நிறைவில் இயற்கை வேளான் விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

கூட்டத்தின் தீர்மானங்கள்:

1. விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க கோரியும்.

2. தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்று தமிழக அரசு அறிவிக்க கோரியும்.

3. கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் உள்ள மூகாசபரூர்
கிராமத்தில் பொதுநூலக கட்டிடம் மற்றும் அஞ்சல் நிலையமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதை அரசு கவனத்தில் கொண்டு புதிய கட்டிடம் அமைத்து தரவும்

தீர்மானம் நிறைவெற்றப்பட்டது.

முந்தைய செய்திதேசியப் பெருநாளாகப் பொங்கலைக் கொண்டாடுவோம்! நாம் தமிழர் சீமான் அறிக்கை
அடுத்த செய்திகடலூர் மாவட்டம் (கிழக்கு) சின்னப்பேட்டையில் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழர் திருநாள் விழா நடைபெற்றது.