கடந்த 29ஆம் தேதி வீரத்தமிழன் முத்துகுமாரின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவு பதாகை நாம் தமிழர் கட்சி குன்றத்தூர் ஒன்றியம், கொல்மாநகரில்(குன்றத்தூர் சேக்கிழார் அரசினர் உயர்நிலை பள்ளி அருகில்) திருக்கப்பட்டது. இந்நிகழ்வில் காஞ்சி மேற்கு மாவட்ட தலைவர் திருமலை, மாவட்ட செயலாளர் ராசேந்திரபிரசாத், காஞ்சி மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் இராவணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
பதாகை திறக்கும் பொழுது அங்கு பள்ளி மாணவர்கள் கூடி எங்களுடன் இணைந்து அண்ணன் முத்துகுமார்க்கு வீர வணக்கம் செலுத்தினர்.