நீலமலை நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

28

1. நீலமலை நாம் தமிழர் மாவட்ட செயலாளர் பேரா.பா.அனந்த் உள்ளிட்ட தமிழர்களை பொய் வழக்கில் கைது செய்து சிறைப்படுத்திய காவல்துறையை வண்மையாக கண்டிக்கிறோம்.

2. தேவாலா அட்டியில் நகராட்சி நிர்வாகத்தால் நிறைவேற்றப்படாத அடிப்படை வசதிகளான குடிநீர் சாலைவசதி மின் விளக்கு போன்றவற்றை உடனே நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

3. தேவாலா அட்டிக்குட்பட்ட மயான சாலை பிரச்சினை தீர்க்கப்பட்டு அங்கு நிழற்குடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

4. பொது மக்களை வனவிலங்குகளின் அச்சுறுத்தலில் இருந்து காக்க வனத்துறை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

என்ற கோரிக்கைகள் அடங்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் மாவட்ட செயலாளர் பேரா.பா.அனந்த் அனைத்து அரசியல் கட்சி நண்பர்களுக்கும், ஊடக மாவட்ட தலைமையின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார்.