நாம் தமிழர் கட்சியின் சார்பாக சங்கரன் கோவில் தொடர்வண்டி மறியல் போராட்டம்

24

திருநெல்வேலி மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக சங்கரன் கோவில்  தொடர்வண்டி மறியல் (7.11.13)  போராட்டம் எழுச்சியுடன் நடந்தது. போராட்டத்தில் 30 பேர் கலந்து கொண்டனர். தாண்டாவாளத்தில் இறங்க கூடாது என்று சங்கரன் கோவில் ஆய்வாளர் அறிவுறுத்தியதை அடுத்து சங்கரன் கோவில் ஒருங்கிணைப்பாளர் திரு.அ.கோ.தங்கவேல் தலைமையில் திரண்ட நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் போராட்டத்திற்கு செல்லும் முன் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். பின்பு தொடர்வண்டி நிலைய நடை மேடைக்கு சென்ற நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை கண்டித்தும், மாநாடு நடந்தால் இந்தியா கலந்து கொள்ள கூடாதென்றும் கோசங்களை எழுப்பினர். தொடர்வண்டி வரும் வரை ஆர்ப்பட்டம் தொடர்ந்தது.பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்கள், இலங்கையில் காமன்வெல்த மாநாடு நடக்க கூடாதென்றும், இலங்கையை காமன்வெல்த அமைப்பிலிருந்து நீக்க வேண்டுமென்றும், இலங்கையில் காமன்வெல்த  மாநாடு நடைபெற்றால் இந்தியா அதில் கலந்து கொள்ள கூடாதென்றும் வலியுறுத்தினர். இலங்கையில் நிகழ்ந்த போர் குற்றங்களுக்கு மத்திய அரசு துணைபோகியிருப்பதால், இலங்கையை எதிர்பதற்கு இந்தயா பயப்படுகிறதென்றும், காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடந்தால் ராஜபக்சே அதற்கு தலைவராகிவிடுவார். தலைவராக இருக்கின்ற காலம் வரை அவரை எந்தவொரு குற்றவழக்கிலும் கைது செய்ய முடியாது என்ற உள்நோக்கத்தை கவனத்தில் வைத்து இந்தியா செயல்பட்டு வருவதாக கடுமையாக குற்றம்சாட்டினர்.    தொடர்வண்டி வந்தவுடன் பயணிகளோடு நின்று கொண்டிருந்த நாம் தமிழர் கட்சி தோழர்கள் தொடர்வண்டி மீது ஏறி வண்டியை முற்றுகையிட்டனர். அனைவரையும் கைது செய்த காவல்துறை மாலை ஆறு மணிக்கு விடுவித்தது.

முந்தைய செய்திஇனப்படுகொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாடா? அதில் இந்தியா கலந்துகொள்வதா? புதுவையில் கண்டன பேரணி பொதுக்கூட்டம்.
அடுத்த செய்திநாம் தமிழர் மதுரை விமானநிலையம் முன்பு ஆர்பாட்டம் உருவ பொம்மை எரிப்பு