காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதை கண்டித்தும் நடைபயணம்

61

கன்னியாகுமாரி மாவட்டம் முன்சிறை ஒன்றியத்தில் 29-10-2013 மாலை 5 மணியளவில் இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை தொடர்து தாக்கி சிறை பிடிப்பதை கண்டித்தும், காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதை கண்டித்தும், கடலோர கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க உடனடியாக தடுப்பு சுவர் கட்டவும் இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசை வலியூறித்தியூம் சின்ன துறை சந்திப்பிலிருந்து நித்திரவிளை சந்திப்பு வரை விழிப்புணர்வு நடைபயணம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரி.மணிமாறன் தலமையில் நடந்தது. இந்நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரூபன், நாகராஜன், மாவட்ட இளைஞர்பாசறை ஒருங்கிணைப்பாளர் கு.ரூ.சதீஸ்,மாவட்ட மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் வினோத், திருவட்டார் ஒன்றிய பொறுப்பாளர் திரு.சசி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் முன்சிறை ஒன்றிய பொறுப்பாளர்கள் பால் ராஜ், ராஜகுமார், பேஜின் காஸ்ட்ரோ, குளச்சல் நகர செயலாளர் டேவிட் குண சிங், செய்தி தொடர்பாளர் சுரேஷ்,எழுதேசம் பேரூராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் நமது உறவுகள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திதிருநெல்வேலி மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக் கூட்டம்
அடுத்த செய்திதாதுமணல் கொள்ளையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்