திருநெல்வேலி மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக் கூட்டம்

176

திருவள்ளுவர் ஆண்டு 2044, துலை மாதம் 11ம் திகதி (27.10.13) ஞாயிற்றுக்கிழமை.

திருநெல்வேலி மாவட்டம், மேலநீலீதநல்லூர் ஒன்றியம், குருக்கள்பட்டி கிராம நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொள்கை விளக்க பொது கூட்டம் மாலை 6 மணிக்கு தொடங்கி சிறப்பாகவும், எழுச்சியுடனும், நடைபெற்றது.

திரு. முருகன் அவர்கள். (மேலநீலீதநல்லூர் ஒன்றிய ஒருங்கினைப்பாளர், குருக்கள்பட்டி) வரவேற்புரை நிகழ்த்த கூட்டம் இனிதே துவங்கியது.

துவக்கவுரை ஆற்றிய திரு. கரும்புலி கண்ணன் (மானூர் ஒன்றியம்) அவர்கள், ஆங்கிலேயனை எதிர்த்து போரிட்ட எம் பாட்டன்களான மருது சகோதர்களின் பிறந்தநாளான இன்று நாம் தமிழர் கட்சியின் வீரவணக்கத்தை தெரிவித்து கொண்டு தன்னுடைய உறையை தொடங்கினார். கூடங்குளம் அணுவுலை திறக்கபடாமலேயே தற்ப்போது வந்துகொண்டிருக்கிற தடையில்லா மின்சாரம் தேர்தலுக்கு பிறகும் வருமா என்று கேள்வி எழுப்பிய அவர், கூடங்குளம் அணுவுலை உடனடியாக மூடப்படவேண்டும் என வலியுறுத்தினார். காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் பற்றி கடுமையாக சாடிய அவர், மிகவும் கேவலமான செயலான இவை நாட்டுற்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறினார்.

பொதுக்கூட்டத்தை தொகுத்து வழங்கிய திரு.அ.கோ.தங்கவேல் அவர்கள், (சங்கரன் கோவில் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்) மத்திய இணையமைச்சர் நாராயணசாமியை கடுமையாக சாடினார். காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாவிட்டால் இந்தியா தனிமைப்படுத்தப்படும் என்ற கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கிற நாராயணசாமி, 2009 ல் தமிழக அரசியல் கட்சி தலைவர்களை கோமாழிகள் என்று விமர்சித்த இலங்கை தளபதியை காண்டிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

திரு.பன்பொலி கணேசன் அவர்கள். (செங்கோட்டை ஒன்றிய இளைஞர் அணி) பேசுகையில் விவசாயத்திற்கு முக்கியதுவக்கமளிக்க வேண்டிய மத்திய அரசு விசாயத்தை கைவிடச்சொல்லுவது வேடிக்கையாக உள்ளது என்றும். கனடாவில் ஒரு கிலோ 45 ரூபாய்க்கு விற்கும் இந்திய வெங்காயம், இந்தியாவில் 150 ரூபாய்க்கு விற்க காரணம் என்னவென்று கேள்வி எழுப்பினார். மற்றும் ஆங்கிலவழி கல்வியை கடுமையாக சாடிய அவர், தாய் மொழியில் கல்வி கற்று சாதித்து காட்டி, இன்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கக்கூடிய நாடுகளை பட்டியலிட்டார். மாற்று மொழி கல்வி மாணவர்களின் சுயமாக சிந்திக்கும் திறனை மழுங்கடித்து விடுவதாக கூறினார்.

சங்கரன்கோவில் ஒன்றிய இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் செல்வன். முத்துக்குமார் அவர்கள் பேசுகையில், வாசுதேவநல்லூரிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மணலை கடத்தி வரும் TTV சேம்பர் செங்கல் நிறுவனத்தின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவிட்டால் நாம் தமிழர் கட்சியினர் சட்டத்தை தன் கையில் எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என கடுமையாக எச்சரித்தார். TTV சேம்பர் செங்கல் நிறுவனத்திடம் அனைத்து அதிகாரிகளும் கையூட்டு பெறுக்கிறார்கள் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

திருநெல்வேலி மாவட்ட மேற்கு பகுதி செய்திதொடர்பாளர்: செல்வன். இரா.ஆல்வின், பேசுகையில் தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் கருவி எடுத்து போராடியதன் நோக்கத்தை மக்கள் மத்தியில் தெளிவாக எடுத்துரைத்தார். எமது மக்கள் மேதகு.வே.பிரபாகரன் அவர்களை பயங்கரவாதி என்று சொல்லுவதை நிறுத்திகொள்ள வேண்டுமென்பதை உரைத்த அவர், எமது தலைவர் பயங்கரவாதியென்றால் இந்தியாவின் விடுதலைக்காக கருவி எடுத்து போராடிய நேத்தாஜி, பகத்சிங், உத்தம் சிங், போற்றோரும் பயங்கரவாதிகள் என்று ஏற்றுக்கொள்ள முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார். மற்றும் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி மெட்ரோ தொடர்வண்டியில் பயணம் செய்த பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்பமொய்லி அவர்களை விமர்சித்த அவர், எங்கள் ஐயா.பெருந்தலைவர்.காமராசருக்கு 1954 லேயே இருந்த அந்த அறிவு வீரப்பமொய்லிக்கு 2013 ல் வந்ததன் காரணம் என்னவென்று கேள்வி எழுப்பி, நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதாலோ என்னவோ என்று பதில் கூறினார். நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பல நாடகங்களை அரசியல் கட்சிகள் அரங்கேற்றிவருவது குறிப்பிட்த்தக்கது. TTV செம்பர் செங்கல் நிறுவனத்தின் மணல் கொள்ளையை கண்டித்த அவர், காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நிறுவனத்திடம் கையூட்டு பெற்று கொண்டிருக்கிற, பெற்றுக்கொண்ட  அத்தனைபேரின் விவரமும் விரைவில் வெளியிடப்படும் என்று எச்சரித்தார்.

சட்டத்தரணி திரு. விசயராச் அவர்கள் தீர்மாணத்தை வாசிக்க கிராம மக்களின் ஏகோபித்த ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.   

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மாணங்களின் விவரம் பின்வருமாறு:

1.  மத்திய அரசே! காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெற அனுமதிக்காதே!

2.  மத்திய, மாநில அரசுகளே! தமிழருக்கு சொந்தமான கச்சதீவை உடனே திரும்ப்பெறு.

3.  மத்திய, மாநில அரசுகளே! கூடங்குளம் அணுவுலையை உடனே இழுத்து மூடு. அங்கு போராடும் மக்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் உடனே திரும்ப பெறு.

4.  தமிழக அரசே! தமிழ் மண்ணில் பூரண மது விலக்கை உடனே அமல்படுத்து.

அடுத்ததாக செல்வன். கருப்பசாமி அவர்கள் (வாசுதேவநல்லூர் ஒன்றியம்) பேசுகையில் தமிழர்களின் வரலாற்றையும், இந்தியாவின் வரலாற்றையும் ஆதாரபூர்வமாக எடுத்துகூரிய அவர், இந்தியாவின் மூத்த குடிமக்கள் தமிழர்கள் என்பது, ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டதையும், இச்செய்தி ஏழு ஆண்டுகளுக்கு முன்பே செய்திதாள்களில் வெளியிடப்பட்டதையும் சுட்டி காட்டினார். இமையம் வரை தமிழர்கள் பரவி வாழ்ந்தர்கள் என்பதை மார்சிஸ்ட் கட்சியின் முக்கய தலைவர்களுள் ஒருவரான திரு.சோதி பாசு ஒப்புகொள்வதையும். தெளிவாக விளக்கினார். கால் நூற்றாண்டுகளாக ஈழத்தமிழர்களுக்கு நன்மை செய்யாது அவர்களை கொன்றோழித்த இந்திய அரசு, காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொடால்தான் ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்ய முடியுமென்ற காங்ரஸ் கட்சியினரின் விசமாத்தனமான பிரச்சாரத்தை விளக்கிய அவர், காமன்வெல்த் மாநாட்டில் இந்திய கலந்து கொண்டால் தமிழர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்படும் என்று கடுமையாக எச்சரித்தார்.

அடுத்ததாக பேசிய திருநெல்வேலி மாவட்ட கலை, இலக்கிய பண்பாட்டு பாசறை ஒருங்கிணைப்பாளர்: திரு. பசும்பொன் அவர்கள். தமிழ் மொழியின் சிறப்புகளை தெள்ளதெளிவாகவும், அழகாகவும் எடுத்துரைத்தார். பிற நாடுகளில் தமிழ் போற்றப்படும் சிறப்பையும் மிக சிறப்பாக விளக்கிக்காட்டினார். போராட்ட களத்தில் தமிழர்களை தவிக்க விட்டு கடிதம் எழுதிகொண்டே இருக்கும் செயல்லித்தாவை வன்மையாக கண்டித்தார்.

இறுதியாக அண்ணன். செந்தமிழன். சீமான் பாதுகாப்புபடை படையில் உள்ள செல்வன்.தூயவன் (சங்கரன் கோவில் ஒன்றியம்) நன்றியுரை கூற, கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

முந்தைய செய்திதூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்
அடுத்த செய்திகாமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதை கண்டித்தும் நடைபயணம்