19.10.2013 திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் பகுதியில் உள்ள மதுக்கடையை நிரந்தரமாக மூடக்கோரியும், தமிழ்நாடு முழுவதும் பூரண மது விலக்கை அமல்படுத்த கோரியும் மதுக்கடை முற்றுகை போராட்டம் நடந்தது.

106

நாம் தமிழர் கட்சியினரின் தலைமையில் பல்வேறு அமைப்பினரும், கட்சியினரும் கலந்து கொண்ட மதுக்கடை முற்றுகை போராட்டம், மற்றும் ஆலோசனை கூட்டம் வெகு சிறப்பாகவும், எழுச்சியுடனும் நடந்தது.

கடந்த காரி கிழமை (சனி) (19.10.13) திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் பகுதியில் உள்ள மதுக்கடையை நிரந்தரமாக மூடக்கோரியும், தமிழ்நாடு முழுவதும் பூரண மது விலக்கை அமல்படுத்த கோரியும் மதுக்கடை முற்றுகை போராட்டம் நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சி தோழர்கள் உட்பட பல்வேறு அமைப்பினரும், பொதுமக்கள், குழந்தைகள் சேர்த்து மொத்தம் 80 பேர் கலந்து கொண்டனர்.

காவல்துறை நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் கைது செய்த காவல்துறை, ஓர் தன்னியார் திருமண மண்டபத்தில் அவர்களை சிறை வைத்தது.

சிறை கூடத்தை பிரச்சார கூடமாக மற்றும் நாம் தமிழர் கட்சி தோழர்கள் வழக்கம் போல தங்கள் பணியை தொடங்கினர். போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் கூடி வரச் செய்து மதுபானத்தில் ஏற்படும் தீமைகள் பற்றி எடுத்துக்கூறிய அவர்கள், கூடங்குளம் அணுவுலையின் தீமைகள் பற்றியும், அதை நிரந்தரமாக மூடச்செய்வதற்கு அப்பகுதி மக்கள் 2½ ஆண்டு காலமாக அமைதி வழியில் போராடும் போராட்டங்களை எடுத்துரைத்தனர். நடிகர் சங்கங்களை சந்திக்கும் ஜெயலலிதா, 2½ ஆண்டுகள் போராடும் மக்களை சந்திக்க வராதது ஏன்? என்றும் கோள்வி எழுப்பினர்.

அடுத்த கட்ட போராட்டம் குறித்து போராட்ட குழுவினரிடம் ஆலோசனை நடத்திய நாம் தமிழர் கட்சி தோழர்கள் தங்கள் ஆலோசனைக்கூட்டத்தையும், காவல் வைக்கப்பட்டிருந்த திருமண  மண்டபத்திலேயே முடித்தனர்.

மற்றொரு சிறப்பு என்னவென்றால் திருமண மண்டபத்தின் உள்ளே, போராட்டத்தில் கலந்து கொண்ட குழந்தைகள், நம் பாட்டன் ராச ராச சோழனும், நமது தேசிய தலைவர்.மேதகு.வே.பிரபாகரனும் அவர்களும், ஏந்திய கொடியான புலிக்கொடியை ஏந்தி ஆடியது போராட்டக் குழுவினரை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

முந்தைய செய்திதேசியத்தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மாபெரும் ஒருநாள் எழுவர் கால்பந்துப் போட்டி
அடுத்த செய்திராஜபக்சாவுக்கு கிரீடம் சூட்டும் முயற்சிக்கு வைத்துள்ள ஆப்பு தமிழக சட்டப் பேரவைத் தீர்மானம்