தமிழ்க்கலைத்தேர்வு சுவிஸ் – பிரான்சில் நடைபெற்றது

44

06.10.2013 ஞாயிற்றுக்கிழமை பிரெஞ்சுத் தேர்வுஎழுதும் மையமான ikakhdMaison des Examen மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு சுவிசுநாட்டில் இருந்து வினாத்தாளினை கொண்டுவந்தபரீட்சை மேலாளரிடம் அலுவலக ரீதியில் பிரான்சு தமிழ்ச்சோலையின் தலைமைப்பணியகப் பொறுப்பாளர் திரு. ஜெயக்குமார் அவர்கள் மற்றும் கலை ஆசிரியர்கள் பரீட்சை மாணவர்கள் முன்னிலையில் வினாத்தாள்கள் பிரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. நடனம்,வாய்பாட்டு,வயலின்,வீணை,மிருதங்கம் ஆகியவற்றிற்கான எழுத்துப்பரீட்சைகள் நடைபெற்றன. காலை 9.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரை நடைபெற்றது.

புலம் பெயர்மண்ணில் நடாத்தப்படுகின்ற தமிழ்கலையில் தாயகத்திற்கு ஒப்பானதாகவும், சற்றுகடுமையானதாவும், அதேநேரத்தில் தகுதிவாய்ந்த தரம் மிகுந்த பரீட்சையாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரேயொரு தேர்வு சுவிசு நாட்டுபரீட்சைத்தேர்வு என்றுதான் கூறவேண்டும். கடந்த ஆண்டு இப்பரீட்சையில் ஐரோப்பிய ரீதியில் பங்குபற்றிதேர்வு எழுதிய 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த ஆண்டு சுவிசுநாட்டில் பட்டமளிக்கப்பட்டு தாயகத்திலும்,தமிழகத்திலும் இருந்து வந்த மிகப்பெரும் மூத்தகலைஞர்களாலும், கலைப்பேராசிரியர்களாலும் மதிப்பளிக்கப்பட்ருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்கள் தொடர்ந்து ஐரோப்பியநாடுகளில் ஆசிரியர்களாக கடமையாற்றி வருகின்றனர். இன்று நடைபெற்ற இப்பரீட்சையில் 406 மாணவர்கள் கலைத்தேர்வில் பங்குபற்றி தேர்வு எழுதியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்திஇலங்கையில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என உண்ணாவிரதமிருந்த தோழர் தியாகு கைது: நாம் தமிழர் கட்சி கண்டனம்
அடுத்த செய்திஅமெரிக்காவில் அரச நிர்வாகம் முடக்கப்பட்டாலும் ஆப்கானில் போரைக் கைவிடாத ஒபாமா – இதயச்சந்திரன்