யேர்மனி சிறீலங்கா அரசின் தூதரகத்தின் கண்காட்சியில் ஈழத்தமிழர்களின் இன அழிப்பை அம்பலப்படுத்திய சுவரொட்டிகள்

48

யேர்மன் மற்றும்  சிறீலங்கா அரசின் இடையான 60 ஆண்டுகால ராஜதந்திர உறவை முன்னிட்டு பேர்லின் நகரத்தில் நடைபெறும் கண்காட்சியில்  ஈழத்தமிழர்களின் இன அழிப்பை அம்பலப்படுத்திய சுவரொட்டிகள்.

ஸ்ரீலங்கா அரசு தனது கோர முகத்தை மறைத்தும், வரலாற்று ரீதியாக இலங்கை தீவில் ஈழத்தமிழர்களின் இருப்பை மூடி மறைத்து “இயற்கை வனப்புடைய நிலம்” எனும் தலைப்பில் யேர்மன் நாட்டுடன் ஏற்பட்ட முதல் தொடர்புகளை அடிப்படையாக கொண்டு இக் கண்காட்சியை நடாத்துகின்றது.

பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்றழித்து இன்று வரை சர்வதேச ரீதியாக எவ்வித நீதியும் கிடைக்காமல் இருக்கும் நிலையில்  சிறீலங்கா அரசு தனது இரத்தம் படிந்த கோர முகத்தை சர்வதேச அரங்கில் மூடி மறைப்பதற்கு தனது தூதரகத்தின் ஊடாக முழுமுயற்சியில் இறங்கியுள்ளது.

குறிப்பாக யேர்மன்  சிறீலங்கா தூதரகம் யேர்மன் அரசாங்கத்துடன் தனது ராயதந்திர உறவை பேணுவதில் மற்றும் அதை மேலும் பலப்படுத்த  கடும்  முயற்சியில்  இறங்கியுள்ளது  .

அந்த வகையில் இக் கண்காட்சியில்  சிறீலங்கா அரசின் கோர முகத்தை அம்பலப்படுத்தும் வகையில் தமிழீழ உணர்வாளர்களால் சுவரொட்டிகள் கண்காட்சி நடைபெறும் மண்டபத்தின் உள்ளேயும் மற்றும் வெளி முன்றலிலும்ஓட்டப்பட்டது.

இதேவேளை, தேசியம் பேசி தேர்தலில் வென்ற மறுகணமே கொலைகாரன் மகிந்தாவின் கைகளை இறுக்கிப்பிடிக்கும் கயவர்களின் மத்தியில் தேசியம் தாயகம் தன்னாட்சி என நிலத்திலும் புலத்திலும் உறுதியோடு பயணிக்கும் தமிழின உணர்வாளர்கள் நிச்சியமாக மாவீரர்களின் துணிவோடு தமிழீழம் அமைப்பார்கள்.

முந்தைய செய்திஇலங்கையின் இறுதிப்போரில் ஐ.நா தோல்வி : இன்னர் சிட்டி பிரஸ் இறுதி அறிக்கையை இன்று வெளியிட்டது
அடுத்த செய்திஇந்திய அரசை ஐ.நா வின் இலங்கைக்கு எதிரான நிபுணர் குழு போற்க்குற்ற அறிக்கையை ஆதரி – குமாரபாளையம் நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்