தஞ்சை அருகே உள்ள விளார் கிராமத்தில் இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட அர்ஜுனன் தபசு சிலை போல, இந்த முற்றத்திலும், ஒரே கல்லில் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை சிற்பமாக வடித்துள்ளனர். முள்ளிவாய்க்காலில் நடந்த கடைசி நேர கொடூரக் கொலைகள், படுகொலைகளை நினைவூட்டும் காட்சிகள் இதில் அடங்கியுள்ளன.மேலும் இந்த நினைவிடத்தில் ஈழத்துக்காக தீக்குளித்து உயிர் நீ்த்த முத்துக்குமார் உள்ளிட்டோரின் சிலைகளும், தமிழறிஞர்கள், தமிழுக்காக பாடுபட்டு உயிர் நீத்தவர்களின் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. இந்த நினைவிடம் தற்போது திறப்புக்கு தயாராகி விட்டது.
இதை திறப்பது தொடர்பான நிகழ்ச்சி குறித்து தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு கட்சியினரும் கலந்து கொண்டனர்.
திறப்பு விழாவினை வருகிற 2013ஆம் ஆண்டு நவம்பர் 9, 10, 11 ஆகிய தேதிகளில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது .
திறப்பு விழாவிற்கு தமிழ்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள தமிழறிஞர்கள் கவிஞர்கள் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆகியோர் வருகை தருகின்றனர்.