இலங்கையில் நடைபெறும் காமன்வெலத் மாநாட்டில், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் கலந்துகொள்ளக்கூடாது என வலியுறுத்தி தமிழர்கள் பாரிய ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்கள். பிரித்தானியப் பிரதம மந்திரியின் வாசல்ஸ்தலத்திற்கு முன்னதாக(10 டவுனிங் வீதி) இந்த ஆர்பாட்டம் நடைபெற்றுள்ளது. இனப் படுகொலை புரிந்த இலங்கை அரசு நடத்தும், இம் மாநாட்டை டேவிட் கமரூன் புறக்கணிக்கவேண்டும் என்று தமிழர்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறார்கள். குறிப்பிட்ட இந்த ஆர்பாட்டத்தில் பலர் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.