தியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோர் நினைவு எசன் நகரில் நினைவுகூரப்பட்டது

43

தாயக விடுதலைக்காக , உண்ணாநோன்பிருந்து போராடி சாவைத் தழுவிக் கொண்ட தியாகதீபம் திலீபன்  மற்றும் வான்புலிகளின் தளபதி சங்கர்  ஆகியோரது நினைவு நிகழ்வு நகரில் 28.09.2013 சனிக்கிழமை  அன்று எஸெந் நகரில்   நடைபெற்றது. சுடர்வணக்கம் , மலர் மற்றும் அகவணக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில். செந்தளிர் இசைக்குழுவின் இசைவணக்கம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தியாக தீபம் திலீபன் அவர்களினதும், கேணல் சங்கர் அவர்களினதும் வீரத்தைப் போற்றி, விடுதலைப் பாடல்களுக்கான நடனம் நடைபெற்றது. மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற நடன நிகழ்வுகள் மெய் சிலிர்க்க வைப்பதாக அமைந்தன.

அதனைத் தொடர்ந்து, Essen வாழ் இளையவர்களின் மென்குழல் இசைக்கச்சேரியும், விடுதலைப் பாடல்கள் தொகுக்கப்பட்ட இசைக்கச்சேரியும் நடைபெற்றது.

எமது மண்ணில் அமைதியை நிலைநாட்ட என்று உட்புகுந்த இந்திய இராணுவத்தை எதிர்த்துநின்ற திலீபன் அவர்கள் தனது மக்களுக்காக , தனது மண்ணிற்காக உயர்ந்த ஒரு பணியைச் செய்து சென்றார். எமது விடுதலைக்காக விண்ணையும் சாடி நின்ற வான்புலிகளைக் கட்டி எழுப்ப, சிறந்த அத்திவாரமிட்ட கேணல் சங்கர் அவர்கள் மாபெரும் சாதனைகளுக்கு வித்தாகி நின்றார். இவர்களது நினைவோடு இனிவரும் சந்ததி வலுவாகப் போராடவேண்டும் என்ற சிற்றுரையோடு , நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற எழுச்சிப் பாடல் ஒலிக்க, தாராக மந்திரம் முழங்கியபடி நிகழ்வுகள் எழுச்சியுடன் நிறைவுபெற்றன.

அழியாச்சுடர்கள் – தியாகதீபம் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வு – பிராங்போட், லண்டோ

1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள் தமிழ் மக்களின் நியாயமான நேர்மையான ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த விடுதலைப் புலிகளின் யாழ் பிராந்திய அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீபன் உண்ணா விரதப்போராட்டம் தொடங்கி பன்னிரண்டு நாளாக தொடர்ச்சியாக 265 மணித்தியாலங்களை முடித்துக்கொண்ட வேளையில் 1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி சனிக்கிழமை காலை 10.58 மணியளவில் தமிழீழ மண்ணிற்கு தன் உயிரை ஈர்ந்து தமிழ் மக்களை மீழாத் துயரில் ஆழ்த்தினான்.

முந்தைய செய்திதியாகி திலீபன் அவர்களின் நினைவாக யேர்மனி பேர்லின் நகரில் 4 காவது தடவையாக நடைபெற்ற உள்ளரங்க உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி
அடுத்த செய்திதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் புதுக்குடியிருப்பு வீடு சிங்களத்தால் தகர்ப்பு.