கனேடிய பிரதமருக்கு நன்றி தெரிவிக்க ஒட்டாவாவில் அணிதிரளவுள்ள தமிழர்கள்: – ஒக்டோபர் 28ல் மாபெரும் கூட்டம்

36

சிறீலங்காவில் மனித உரிமைகள் , தமிழர்களுடனான இணக்கப்பாடு ஆகியவற்றை வெளிப்படையாக காரணம் காட்டி கொமன்வெல்த் நாடுகள் மாநாட்டினை கனடிய பிரதமர் புறக்கணித்தமைக்கும் கடந்த 30 மாதங்களுக்கும் மேலாக சிறீலங்கா மனிதவுரிமை விடயத்தில் இறுக்கமான போக்கினை சர்வதேச அரங்கில் கடைப்பிடித்து , கனடியத் தமிழர்களது அபிலாசைகளை ஏற்றுப் பயணிக்கும் கனடிய அரசுக்கு – குறிப்பாக மாண்புமிகு பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் , வெளி விவகாரத்துறை அமைச்சர் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் , கனடிய ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாகவும் , சுயாதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் , நீதியான தமிழர் தீர்வின் அவசியத்தை எடுத்தியம்பியும் , கனடியத் தமிழர் அமைப்புக்களையும் இணைத்து கனடியத் தமிழர் சமூகம் நடத்தும் மாபெரும் ஒன்று கூடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக ஏற்ப்பாட்டாளாகள் அறிவித்துள்ளனர்.

இடம் : கனடியப் பாராளுமன்ற முன்றல் ஒட்டாவா

காலம்: திங்கட்கிழமை , ஒக்டோபர் 28 ஆம் நாள்

நேரம் : காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை

 

பேரூந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது – தொடர்பு கொண்டு பெயர்களைப் முற்பதிவு பதிவு செய்யவும்.

ஒற்றுமைப்பட்ட இனமாக ஓரணியில் அணி திரள்வோம்.

தகவல் – கனடிய தமிழர் சமூகம்

மேலதிக தொடர்புகளுக்கும் விபரங்களுக்கும் : 416-930-5937 or 647-203-6261 or 416-903-6058

முந்தைய செய்திபொதுநலவாய நாடுகள் இலங்கைக்கு எதிராக அழுத்தம் கொடுக்க வேண்டும் – சர்வதேச மன்னிப்பு சபை
அடுத்த செய்திபொதுநலவாய மாநாட்டில் இலங்கைக்கு எதிர்ப்பை தெரிவிக்கவுள்ள நியூசிலாந்து பிரதமர்!