தமிழர் தேசத்தின் மீதான சிங்கள ஆக்கிரம்பில் பெரும் வலிகளைச் சுமந்திருந்த முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மண், சிங்களத்துக்கு முதலடியை தமிழர் தேசம் கொடுத்துள்ளது. வெளிவந்துள்ள தாபால் வழி வாக்களிப்பு முடிவுகளில் முல்லைத்தீவில் 81.26 வீத வாக்குகளையும், கிளிநொச்சியில் 82.26 வீத வாக்குகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கி தங்களுடைய மனெழுர்சியினை மக்கள் பதிவு செய்துள்ளனர். முல்லைத்தீவில் நிராகரிக்கப்பட்ட 5 வாக்குகள் தவிர்த்து 795 மொத்த வாக்குகளில் தமிழரசுக் கட்சி 646 வாக்குகளைப் பெற்றுளளது. ஆளும் சிறிலங்கா ஐ.ம.சு.மு 146 வாக்குகள் மட்டும் பெற்றுள்ளது. இதேவேளை ஐதேக 2 வாக்குகளைப் பெற்றுள்ளது. கிளிநொச்சியில் நிராகரிக்கப்பட்ட 10 வாக்குகள் தவிர்த்து 919 மொத்த வாக்குகளில் தமிழரசுக் கட்சி 756வாக்குகளைப் பெற்றுளளது. ஆளும் சிறிலங்கா ஐ.ம.சு.மு 160 வாக்குகள் மட்டும் பெற்றுள்ளது. இதேவேளை ஐதேக 1 வாக்கை பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட தபால் மூலமான வாக்களிப்பில் இலங்கை தமிழரசுக்கட்சி 7625 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1099 வாக்குகளையும் ஐக்கிய தேசியக்கட்சி 35 வாக்குகளையும் பெற்றுள்ளன.