மகிந்த இராஜபக்சவின் நியூயோர்க் வருகைக்கு எதிரான கனடியத் தமிழர் தேசிய அவையின் கண்டன அறிக்கை.

12

தொடரும் உலகின் அமைதிகாத்தலால் அநீதியாளர்களால் ஈழத்து தமிழினம் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டும் ஒடுக்கப்பட்டும் உரிமைகள் மறுக்கப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் வாழ்கின்ற இழி நிலை போக்கி எம் மக்களை காக்கும் பொறுப்பு உலகத்தமிழினத்தின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொடியோர் முகத் திரைகள் கிழிக்கப்பட்டு எம் மக்கள் மீது கட்டவிழ்த்த அநீதிக்கு தண்டனை பெற்று நீதியை விடுதலை செய்யும் காலம் வரை தமிழினம் உறங்குதல் கூடாது.

உலகின் மனசாட்சிகளை எம் இனப்படுகொலைகள் ஆறாத காயங்கள் துடைக்கப்படாத கண்ணீர் இன்னமும் தட்டி எழுப்பாத போதும் தொடர்ச்சியான மக்கள் தன்னெழுச்சி போராட்டங்கள் நீதி கிடைக்கும் வரை தமிழர்களால் நடாத்தப்பட வேண்டிய காலத்தின் தேவை உணர்ந்து வீச்சோடு எம் மக்கள் போராட வேண்டும். இது குறிப்பாக புலத்தில் வாழும் தமிழ் மக்களின் காலக் கடன்.

எதிர் வரும் செப்டம்பர் 23, 2013 திங்கட்கிழமை நியூயோர்க்கில் உள்ள ஐ. நா. சபையில் கலந்து கொள்ள வருகின்ற இலங்கை சனாதிபதியும் தமிழின அழிப்பாளனுமான மகிந்த இராசபக்சவின் வருகையை கண்டித்து ஐ. நா. சபை முன்றலில் நடைபெறவுள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கனடா அமெரிக்கா வாழ் உறவுகள் மற்றும் வர முடிந்த உலகத் தமிழர்கள், மனித நேய பற்றாளர்கள் அனைவரையும் கலந்து கொண்டு உலகிற்கு கொடும்கோலரின் கோரமுகத்தை கிழித்துக் காட்டி நீதி கேட்டுப் போராட வாருங்கள் என கனடிய தமிழர் தேசிய அவை அனைத்து மக்களையும் வேண்டிக் கொள்கின்றது.

அநீதிகளை கூண்டில் ஏற்றி தண்டனை பெற்றுக் கொடுக்கும் வரை நீதியை மீட்டெடுத்து வாழ வைக்கும் வரை இனியும் ஓயமாட்டோம் என தமிழர்கள் நாம் உறுதி கொண்டு இந்த காலக் கடமையினை கண்ணெனக் கருதி கருத்தில் ஏற்று மாபெரும் மக்கள் எழுச்சியாக அணி திரண்டு போராடுவோம் வாருங்கள்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்!

முந்தைய செய்திவெடி கொழுத்திக் கொண்டாடிய பல்கலைக்கழக மாணவர் மீது இராணுவம் தாக்குதல்!
அடுத்த செய்தி‘பாரிய பொறுப்பை மக்கள் ஒப்படைத்துள்ளார்கள்’ – விக்னேஸ்வரன்