சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நடாத்தப்பட்ட 22வது மாவீரர் உதைபந்தாட்டம் 2013

62

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நடாத்தப்பட்ட 22வது தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகளானது 14.09.2013 சனிக்கிழமை அன்று Luzern (Root) இல் உள்ள Unterallmend மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

பொதுச்சுடர் ஈகைச்சுடர் ஏற்றல் நிகழ்வுகளை தொடர்ந்து சுவிஸ் தேசியக்கொடி, தமிழீழத் தேசியக்கொடி, விளையாட்டுத்துறைக்கொடி என்பன ஏற்றி வைக்கப்பட்டதுடன் அகவணக்கத்தைத் தொடர்ந்து மலர்வணக்கம் செலுத்தப்பட்டு விளையாட்டுகள் ஆரம்பமாகின.

உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், துடுப்பெடுத்தாட்டம் போன்ற போட்டிகள் நடைபெற்றன. விளையாட்டுக்கழகங்களைச் சேர்ந்த பலநூற்றுக்கணக்கான போட்டியாளர்களோடு, மக்களும் பெருமளவில் ஆர்வத்தோடு பங்குபற்றி போட்டிகளை மிகவும் விறுவிறுப்பாக்கி இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

தாயகம் நோக்கிய தேடலை உண்டுபண்ணும் நோக்கில் ஒழுங்கமைக்கப்பட்ட இந்நிகழ்வானது, வெற்றி பெற்ற கழகங்களைச் சேர்ந்த வீரர்களுக்கு மாவீரர்கள் ஞாபகாத்தமாக பதக்கங்கள், வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றன.

போட்டிகள் அனைத்தும் சிறப்புற நடைபெற அனைத்து வகைகளிலும் ஒத்துழைப்பு நல்கிய கழகங்கள், சம்மேளன உறுப்பினர்கள், இன உணர்வாளர்கள் உள்ளிட்ட அனைத்து எமது உறவுகளையும் அன்போடும், நன்றியோடும் இறுகப் பற்றிக்கொள்கின்றோம்.

 

 

 

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

முந்தைய செய்திதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றும் தனிநாட்டினை கோரவில்லை – இரா.சம்மந்தன்
அடுத்த செய்தி“பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திற்கு தடை” தடையை மீறி கூட்டம் நடைபெறும்.