வெடி கொழுத்திக் கொண்டாடிய பல்கலைக்கழக மாணவர் மீது இராணுவம் தாக்குதல்!

17

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுவருவதையிட்டு வெடி கொழுத்திக் கொண்டாடிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடாத்தியதில் பல்கலைக்கழக மாணவர் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்.பல்கலைக்கழகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றியை வெடி கொழுத்தி கொண்டாடிய பல்கலைக்கழக மாணவர்கள் விடுதிக்குள் இராணுவத்தினர் நுழைந்து தாக்குதல் நடத்திவருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

முந்தைய செய்திகூட்டமைப்பின் ஆதரவாளர் வீட்டுக்கு தீ வைத்தனர் ஆளும் கட்சி ஆதரவாளர்கள்! – வன்னிவிளாங்குளத்தில் சம்பவம்
அடுத்த செய்திமகிந்த இராஜபக்சவின் நியூயோர்க் வருகைக்கு எதிரான கனடியத் தமிழர் தேசிய அவையின் கண்டன அறிக்கை.