வடக்கு தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் பிரான்ஸ் வாழ் தமிழ்மக்கள்.

67

தமிழ்த் தேசிக் கூட்டமைப்பு வரலாற்று வெற்றியைப் பெற்றுக்கொண்டுள்ள மகிச்சிகரமான செய்தி வெளிவந்திருப்பதைத் தொடர்ந்து, தாயக மக்களைப் போன்று பிரான்சிலும் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்றுள்ளன. பாரிஸ் லாச்சப்பல் பகுதியில், தமிழர்நடுவப் பிரதிநிதிகளுடன், பொதுமக்கள் இணைந்து இந்தக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். வெற்றியை மகிழ்வோடு வரவேற்று துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், மக்கள் இனிப்புப் பண்டங்களைப் பரிமாறி, தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். லாச்சப்பல் பகுதியிலுள்ள தமிழர் வர்த்தக உரிமையாளர்கள், பணியாளர்கள், இந்த மகிழ்சியில் இணைந்துகொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், வெற்றிபெற்ற பிரதிநிதிகள், மக்களோடு தொலைபேசியில் அளவளாவி, தமது மகிழ்வினையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டனர். பிரான்சில் இயங்கும் தமிழர் வானொலி நேரடியாக இந்நிகழ்சிகளை ஒலிபரப்புச் செய்தது. அத்துடன், தமிழர் நடுவப் பிரதிநிதிகள், பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்று, ஒலிபரப்பியது. தாயகத்தில் இருந்தும், கூட்டமைப்பின் பிரதிநிதிகள், தமது கருத்துக்களை வானொலி வாயிலாகப் பதிவுசெய்தனர்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
தமிழர் நடுவம் – பிரான்ஸ்.

முந்தைய செய்திஈ.பி.டி.பியினர் தீவகத்தில் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்!
அடுத்த செய்திவடக்கில் தேர்தலை நடாத்தியமை தாய் நாட்டிற்கு கிடைத்த வெற்றி – ஜனாதிபதி மஹிந்த