யேர்மனியில் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்ட தியாகி லெப்.கேணல் திலீபனின் வணக்க நிகழ்வு.

21

தமிழர் இறையாண்மைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களினது 26வது ஆண்டு நினைவின் முதலாம் நாள் வணக்க நிகழ்வு உணர்வு பூர்வமாக குமேர்ஸ் பார்க் நகரில் முன்னெடுக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை (15.09.13) பிற்பகல் 3.00 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகிய வணக்கநிகழ்வில் மாவீரர் லெப்.சைமன் அவர்களின் சகோதரன் தமிழீழத் தேசியக்கொடியினை ஏற்றிவைக்க திலீபன் அவர்களின் திருவுருவப் படத்திற்கான ஈகைச்சுடரேற்றல், மலர்வணக்கம், அகவணக்கம் என்பனவும் திலீபனின் நினைவுகளையும் சமகால விடயங்களையும் உள்ளடக்கிய பேச்சு, கவிதை, பாட்டு என்பனவுடன் சிறப்புரை மற்றும் திலீபன் அவர்களின் உண்ணாநோன்புக் காலத்திலான ஒளிப்படப் பதிவுகளும் திரையிடப்பட்டன. இந்நிகழ்வில் பெருமளவிலான மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாகப் பங்கு கொண்டு வணக்கம் செலுத்தினர்.

 

முந்தைய செய்திசாத்தானின் சகதோழன்! – யுகபாரதி
அடுத்த செய்திசர்வதேச தேர்தல் கண்கானிப்பாளர்கள் இருவர் மன்னார் பயணம்!