பிரான்சில் செப்டெம்பேர் 13,14,15 ஆகிய நாட்களில் உலகில் இருந்து 100 நாடுகளின் மக்கள் போராட்டம் அமைப்புகள், மக்கள் போராட்டத்தை பிரதிபடுத்தி, 600,000 மக்கள் கலந்து கொண்ட “Fete de la Humanité” நிகழ்வில் தமிழ் ஈழத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை கலந்து கொண்டு தமிழீழ மக்களின் விடுதலை போராட்டத்தை வலியுறுத்தி தமது செயல்பாடுகளை ஏனைய போராட்ட அமைப்புகளுடன் கலந்து கொண்டு ஈடுபட்டனர்.
இந்த கலந்துரையாடல் ஷெவ்ரோன் தமிழ் சங்கத்தின் நடன குழுவின் போராட்டத்தின் எழுச்சி வடிவத்தையும், தொடர்ச்சியையும் தமது நடனத்த்தின் மூலம் மக்களுக்கு நடமாடியே காட்டியது, இந்த கலந்துரையாடலின் ஒரு உச்ச நிகழ்வாக இருந்தது.
இன்றைய உலக அரசியல் சூழலில் தமது சுயநிர்ணய உரிமைக்காக போராடும் மக்கள் அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஒரு மாபெரும் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையும், குர்திஸ்தான் மக்கள் அமைப்பும் அழைப்பு விடுத்த்தது.
செய்தி: தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு.