நோர்வே ஒஸ்லோவில் நடைபெற்ற திலீபன் மற்றும் ஏனைய மாவீரர்களது வணக்க நிகழ்வு

26

ஒஸ்லோ Grorud Samfunnshus மண்டபத்தில் இடம்பெற்ற போராளிகளின் நினைவெழுச்சிநாள் 28.09.2012 அன்று நடைபெற்றது. தமிழீழவிடுதலைப்போராட்டத்தில் தன்னை உருக்கி, உயிரோடு பாடையிலே  உட்கார்ந்து,மக்கள் புரட்சிக்கு வித்திட்ட தியாகதீபம் திலீபன்,குமரப்பா,புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகள்,புலத்தில் உயிர்தந்த நாதன்,கஐன் இவர்களோடு சங்கர்,ராயு மற்றும் மாலதி ஆகிய போராளிகளின் நினைவெழுச்சிநாள் 28.09.2012 சனிமாலை 6:00 மணிக்கு ஒஸ்லோ ”குறுறூட்” மண்டபத்தில் இடம்பெற்றது. முள்ளிவாய்க்காலிற்கு பின் மக்கள் தோல்விமனப்பான்மையோடு சலிப்படைந்துவிட்டார்கள் என்று கூறுபவர்களின் கருத்தைப்பொய்யாக்கி மண்டபம் நிறைந்தமக்கள் போராளிகளினது  தியாகத்திலும்,விடுதலை உணர்விலும் ஒன்றியிருந்ததைக்காணக்கூடியதாய் இருந்தது.

நோர்வே தமிழ் இளையோர் அமைப்பின் சார்பில் ஈகைச்சுடர்ஏற்றப்பட்டதைத்தொடர்ந்து மக்கள் அனைவரும் மலர்தூவி வணக்கம்செலுத்தினர். அகவணக்கத்தோடு மேடைநிகழ்வுகள் ஆரம்பமாயின.தொடர்ந்து தியாகிதிலீபனின் உண்ணாநேன்பு நினைகளை மீளஅசைபோட்ட விபரணம் திலீபனோடு உண்னாவிரத மேடையில் உடனிருந்த போராளி வாஞ்சிநாதன் அவர்களது நினைவுப்பகிர்வாக இடம்பெற்றது. அடுத்து Asker og Bærum அன்னைபூபதி கலைக்கூட வளாக மாணவிகளினதும்,நர்த்தனகாவிய நாட்டியப்பள்ளி மாணவிகளினதும் நடனங்கள் இடம்பெற்றன. அத்துடன் திலீபனது நினைவுகளையும் போராட்டத்தின் நியாயங்களையும் பாடுபொருளாகக்கொண்ட கவிதை உணர்வுபொங்க மொழியப்பட்டது. இதனிடையே த.ஒ.குழுவின் சார்பில் போராட்டத்தின் இன்றையநிலையும்,மக்களது பங்களிப்புகள் எப்படிஅமையவேண்டும் என்ற எதிர்பாப்பபும் எடுத்துக்கூறப்பட்டது.நிகழ்வின் நிறைவாக திலீபகானங்களும்,தாயககானங்களும் இளைய கலைஞர்களால் இசைக்கப்பட்டதோடு நிகழ்வு
நிறைவடைந்தது.

முந்தைய செய்திதமிழினத்திற்கு நீதிவேண்டிய மிதியுந்து பயணம் பெல்ஜியம் புருசல்ஸ் நகரை சென்றடைந்துள்ளது!
அடுத்த செய்திபிரித்தானியாவில் தியாகி திலீபன் அவர்களின் 26ம் ஆண்டு நினைவு சுமந்த வீரவணக்க நிகழ்வு