நவநீதம்பிள்ளையின் அறிக்கைக்கு இனஅழிப்பினை பர்த்துக்கொண்டிருந்த நாடுகள் வரவேற்பு!

10

நவநீதம் பிள்ளை சிறீலங்கா தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமெரிக்கா நோர்வே இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் என்பன அறிக்கையை வரவேற்றுள்ளன.

ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் நேற்று முன்தினம் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கைக்கு உறுப்பு நாடுகள் ஆதரவாகவும் எதிராகவும் நேற்றைய தினம் பேரவை அமர்வில் கருத்துக்களை முன்வைத்துள்ளன.
இதன்போது மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகள் இரண்டு தரப்புகளாக பிரிந்து இலங்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா நோர்வே இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் என்பன இலங்கை குறித்த நவநீதம் பிள்ளையின் அறிக்கையை வரவேற்றுள்ள நிலையில் நவநீதம் பிள்ளையின் அறிக்கைக்கு ஆதரவாகவும் கருத்துக்களை முன்வைத்துள்ளன.

எனினும் பாகிஸ்தான் பிலிப்பின் ஜப்பான் போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளன. ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்தை வரவேற்றுள்ள இந்த நாடுகள் யுத்தத்தின் பின்னரான இலங்கையின் முன்னேற்ற நிலைமை குறித்து கவனம் செலுத்தவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

நவநீதம்பிள்ளை தனது இலங்கை குறித்த அறிக்கையில் இலங்கை அரசாங்கம் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சுயாதீன நம்பகத்தன்மையான உள்ளக செயற்பாட்டை முன்னெடுக்காவிடின் சர்வதேச சமூகம் சுயாதீன மற்றும் நம்பகமான விசாரணை பொறிமுறையை முன்னெடுக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.
எனினும் இதற்கு பதிலளித்திருந்த இலங்கை தூதுக்குழுவின் தலைவர் ரவிநாத ஆரியசிங்க சர்வதேச சமூகம் சுயாதீன மற்றும் நம்பகமான விசாரணை பொறிமுறையை முன்னெடுக்கும் என்று கூறுவதற்கான உரிமை நவநீதம்பிள்ளைக்கு இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே நேற்றைய தினம் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இடம்பெற்ற விவாதத்தின்போது இலங்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் உறுப்பு நாடுகளினால் வெளியிடப்பட்டுள்ளன. இந்த இடத்தில் மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகள் இரண்டு குழுக்களாக பிரிந்து நின்றே கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

முந்தைய செய்திமுள்ளிவாக்காலில் மக்கள் விட்டுசென்ற சொத்துக்கள் படையினரால் விற்பனை!
அடுத்த செய்திவட சென்னை (கி) மாவட்டம் இராயபுரம் பகுதியில் தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் 26 ஆவது ஆண்டு நினைவுதினம்இ