டென்மார்க்கில் நடைபெற்ற தேசத்தின் குயில்கள் 2013 எழுச்சி பாடல் போட்டி

50

டென்மார்க்கில் தேசத்தின் குயில்கள் 2013 எழுச்சி பாடல் போட்டியானது Ikast நகரில் நடைபெற்றது.  பொதுச்சுடரினை பிரான்ஸ் கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் நிதர்சன் அவர்கள் ஏற்றி வைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்துள்ளார்.

தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டு லெப் கேணல் திலீபன் கேணல் சங்கர் மற்றும் கேணல். ராயு ஆகிய மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தேசத்தின் குயில்கள் மழலைகளுக்கான போட்டிநிகழ்வில் எல்லோரும் மிகவும் உணர்வுபூர்வமாக தாயக உணர்வுடன் பாடல்களை வழங்கியிருந்தார்கள். அரங்கத்தில் நிறைந்திருந்த மக்களின் மனங்களில் தாயகப்பாடல்களால் கவர்த்துள்ளதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

தேசத்தின் இளங்குயில்கள் போட்டியாளர்களும் உற்சாகத்துடனும் தாயகவேட்கையுடன் தங்கள் மனதில் உள்ள ஆதங்கத்தை எழச்சிப்பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியிருந்தனர். தேசத்தின் குயில்கள் (18 வயதுக்கு மேற்பட்டோர்) எழுச்சிப்பாடல்கள் மூலம் தாயக அவலங்களையும் மாவீரர்களின் தியாகங்களையும்  தேசியத்தலைவரின் இலட்சியத்தையும் வெளிக்காட்டினார்கள்.

தேசத்தின் குயில்கள் எழுச்சிப்பாடல் போட்டியில் பங்கு பற்றிய அனைவரும் பாடல்களை மட்டும் போட்டியாகப் பாடவில்லை, தமிழீழ விடுதலையின் முக்கியத்துவம் மாவீரர்களின் இலட்சியம் மற்றும் தமிழீழம் நிச்சயம் ஒருநாள் அமையும் அதற்கு தமிழரின் ஒற்றுமையின் அவசியம் போன்ற விடயங்களையும் வெளிப்படுத்தினார்கள்.

இதனைத்தொடர்து சிறப்பு நிகழ்வாக திருமதி துவாரகா சுகேந்திரா செந்தூரன் அவர்களின் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது. தாயகத்தின் இன்றய நிலமைகள் மற்றிய சிறப்பு உரையினை டென்மார்க் கிளைசார்பில் பொன் மகேஸ்வரன் அவர்கள் ஆற்றியுள்ளார்.

பிரான்ஸ் தமிழீழ இசைக்குழு மிகவும் திறைமையாக எழுச்சிப்பாடல்களுக்கான இசையை வாசித்து பாடகர்களை உற்சாகப்படுத்தினார்கள். தேசத்தின் குயில்கள் 2013 ற்கு நடுவர்களாகக் கடமையாற்றியவர்கள்  கலைமாமணி திரு.கிருபாகரன் அவர்களும் தபேலா இசைக்கலைஞர் நிதர்சன் அவர்களும் கீபோட் ஆசிரியர் சஞ்சீவன்

தேசத்தின் குயில்கள் எழுச்சிப்பாடல் போட்டியில் பங்குகொண்ட டென்மார்க்கில் பிறந்த மழலைகள் மற்றும் இளையோர்களின் பாட்டுத்திறன் தமிழ்மொழியை உச்சரிக்கும் திறன் போன்ற விடயங்கள் நடுவர்களை வியக்கவைத்தது. அந்தவகையில் நடுவர்கள் பெற்றோர்களையும் தமிழ்பாட ஆசிரியர்களையும் பாராட்டினார்கள்.

தேசத்தின் குயில்கள் மழலைகளுக்கான போட்டியில் வெற்றிபெற்றவர்கள்:

1ம் இடம் –செரின் அமெண்டா கிறிரி
2ம் இடம் – ரஐிக்கா கஐந்திரன்
3ம் இடம் – சாருஐh துயந்தன் திசாலி சுரேந்திரன்

தேசத்தின் இளங்குயில்கள் போட்டியில் வெற்றிபெற்றவர்கள்:

1ம் இடம் – மாலதி nஐயானந்தன்
2ம் இடம் – சங்கீத் சத்தியமூர்த்தி
3ம் இடம் – சிவரு~ன் மகேந்திரன் திவாரகா உதயச்சந்திரன்

தேசத்தின் குயில்கள் போட்டியில் வெற்றிபெற்றவர்கள்:

1ம் இடம் – சுகன்யா ஜெயம் (இவர் இரண்டாவது தடவையாக தேசத்தின் குயில்களின சுற்றுக்கிண்ணத்தினை தட்டிச்சென்றுள்ளர்.)

2ம் இடம் – உமாரமணன் பாலசுப்பிரமணியம்
3ம் இடம் – சிவநிஐh உலகநாதன்
தேசத்தின் குயில்கள் 2013 எழுச்சிப்பாடல்போட்டி நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் என்ற பாடலுடன் நிறைவு பெற்றது.

முந்தைய செய்திசுவிசில் சிறப்பாக நடைபெற்ற மூத்த தளபதிளுக்கான நினைவு சுமந்த வணக்க நிகழ்வு
அடுத்த செய்திதமிழினத்திற்கு நீதிவேண்டிய மிதியுந்து பயணம் பெல்ஜியம் புருசல்ஸ் நகரை சென்றடைந்துள்ளது!