ஜெனீவாவிலிருந்து பெல்ஜியம் வரை ஈருறுளிப் பயணம்

16

பெல்சியம் புரூசல்ஸ் நோக்கிய ஈருறுளிப் பயணமானது நேற்றைய நாள் (26.09.2013) ஜேர்மன் நாட்டிலிருந்து புறப்பட்டு 6 கிலோமீற்றர்கள் தூரத்தை ஓடி முடித்து, லுக்ஸ்சம்பூர்க் நாட்டினையும் கடந்து பெல்சியத்தை வந்தடைந்துள்ளது.

இன்றைய நாள் (26.09.2013) அரசியல் ரீதியான சந்திப்புகள் நடைபெற்றதால் ஈருறுளிப் பயணம் பெரியளவில் நடைபெறவில்லை. அத்தோடு நாளையும் அரசியல் சந்திப்புக்கள் நடைபெறவுள்ளதால் இவர்களது பயணம் நடைபெறமாட்டாது. மேலும் இவர்கள் புரூசலை சென்றடைய இன்னும் 180 கிலோமீற்றர்களே உள்ளது.

பெல்சியத்தில் தெற்காசிய விவகாரங்களுக்கு பொறுப்பான குழுவின் தலைவி லம்பெட் அவர்களைச் சந்தித்து ஐந்து அம்சக்கோரிக்கை பற்றி விளக்கிக் கதைக்கப்பட்டது. ஐ.ஒன்றியமானது மனித உரிமைகளுக்கும, சனநாயகத்திற்கும் முன்னுரிமை அளிக்கும். அந்தவகையில் தமிழ்மக்களின் அவலத்தைப் போக்கி, நிரந்தரமான நிம்மதியான வாழ்விற்கு பாடுபடும் என அவர் உறுதியளித்தார்.

எதிர்வரும் 30.09.2013(திங்கட்கிழமை) நடைபெறவுள்ள பேரணியில் அனைத்துலகத்திடம் நீதி கேட்க அனைத்து தமிழ்மக்களும் எமது உரிமைகளுக்காக குரல் கொடுக்க அணிதிரளுமாறு மாந்தநேயச் செயற்பாட்டாளர்கள் அழைப்புவிடுகிறார்கள்.

ஈருறுளிப் பயணம் இறுதி நாளான 30.09.2013 அன்று பெல்ஜியம் தலைநகர் புரூசல்சிலில் மாபெரும் கவனயீர்ப்பு; ஒன்றுகூடல் நிகழ்வும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதநேய செயற்பாட்டாளர்களை தொடர்புகொள்வதற்கு

0032466016618