சுவிசில் சிறப்பாக நடைபெற்ற மூத்த தளபதிளுக்கான நினைவு சுமந்த வணக்க நிகழ்வு

36

இந்நிய வல்லாதிக்கத்திற்கெதிராக அகிம்சைப் போரில் விதையான தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், இலங்கை இந்திய அரசுகளின் கூட்டுச் சதிக்குப் பலியான லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள், முதல் களப்பலியான பெண் போராளி 2ம் லெப். மாலதி, இலங்கை அரசின் சதியால் பலியான லெப். கேணல் நாதன், கப்டன் கஜன், கேணல் சங்கர், கேணல் ராயூ ஆகிய மாவீர வித்துக்களின் நினைவுகள் சுமந்த எழுச்சி நிகழ்வானது 29.09.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று  சப்ஹவுசன் மாநிலத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.

பொதுச்சுடரேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு தமிழீழத் தேசியக்கொடி ஏற்றலுடன் தடையகற்றிகள் தளபதிகளுக்கான ஈகைச்சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டதோடு அகவணக்கமும் மலர்வணக்கமும் செலுத்தப்பட்டன.

மாவீர வித்துக்களின் நினைவுகள் சுமந்த இவ்வணக்க நிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக கவிதை, எழுச்சிப் பாடல்கள், இளையோர்களின் எழுச்சி நடனங்கள் மற்றும் பேச்சும்  இடம்பெற்றன.

அத்துடன் தமிழினப்படுகொலைக்கு நீதிகேட்டு தாய்த் தமிழக மாணவர் சமூகத்தால் முன்னெடுக்கப்பட்ட வரலாறு காணாத போராட்டத்தைக் கருவாகக் கொண்ட அறப்போர் ஆவணப்படமும் மீள் திரையிடப்பட்டது.

நிகழ்வின் இறுதியாக தமிழீழத் தேசியக்கொடி இறக்கலுடன், தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுபெற்றன.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

முந்தைய செய்திதமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நடத்தப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வு
அடுத்த செய்திடென்மார்க்கில் நடைபெற்ற தேசத்தின் குயில்கள் 2013 எழுச்சி பாடல் போட்டி