ஐ.நா முன்றலில் பன்னாட்டவர்களை கவர்ந்த இனஅழிப்பு கண்காட்சி!

41

இனஅழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நாமுன்றலில் மனிதநேய செயற்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ள இனஅழிப்பு சாட்டியங்களின் கண்காட்சி பன்னாடுகளையும் சென்றடைந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமை கூட்டத்தொடர் இன்று நிறைவடையவுள்ள நிலையில் இந்த இனஅழிப்பு புகைப்படங்களை முன்வைத்து நீதிவேண்டி முருகதாசன் திடலில் கண்காட்சியினை நடத்திக்கொண்டிருக்கும் மனிதநேய செயற்பாட்டாளர்கள் நேற்று ஐ.நாவின் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள் அத்துடன் அனைத்து நாடுகளில் தூதர்களுக்குத் தமிழர்களின் பிரச்சனைகளை தெரியப்படுத்தியுள்ளார்கள்.

அந்தவகையில் நேற்று காலை பலநாடுகளை சேர்ந் அதிகாரிகள் மக்கள் இந்த இனஅழிப்பு புகைப்படத்தினை பார்வையிட்டுள்ளார்கள் சிறீலங்கா அரசின் கொடூரத்தினை பார்வையிட்ட வயோதிபர் ஒருவர் தன் மனம் உரிகி பிரார்த்தித்துள்ளார்.

மனித உரிமைகள் கூட்டத்தொடர் இன்று நிறைவடையவுள்ள நிலையில் பன்னாட்டு ஊடகங்களும் இந்த புகைப்பட ஆதாரங்கைள ஒளிப்படங்கள் எடுத்துள்ளன தமிழினத்தின் விடுதலைக்காக இனஅழிப்பிற்கு நீதிகேட்கும் இந்த செயற்பாடுகள் தொடரும் என்று அதில் பங்குகொண்ட மனிதநேய செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்.

அத்துடந் இந்த முருகுதாசன் திடலில் செந்தில் குமரன் என்னத்தை நினைத்து ஊயிரிழந்தானோ அவனது கனவு நனவாக அனைவரையும் ஐரோப்பிய முன்றலில் எதிர்வரும் 30ஆம் நாள் அணிதிரழுமாறு மனிதநேய செயற்பாட்டாளர்கள் வேண்டியுள்ளார்கள். எவ்வாறு ஐ.நா முன்றலில் மக்கள் எழுச்சியுடன் ஒன்று திரண்டு தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தார்களோ அதேபோல் மக்கள் அலையென திரண்டு வருமாறு மனிதநேய செயற்பாட்டாளர்கள் வேண்டிநிக்கின்றார்கள்.

இன்றுடன் இந்த இனஅழிப்புக்கான நீதிவேண்டிய புகைப்பட ஆதாரத்துடனான கண்காட்சி நிறைவு பெறவுள்ளதாகவும் தமிழர்க்கு நீதிகிடைக்கும் வரை தொடர்ந்தும் ஐ.நா முன்றலில் இந்த கண்காட்சியினை நடத்தவுள்ளதாக மனிதநேய செய்பாட்டாளர் கஜன் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்திஜெனீவாவிலிருந்து பெல்ஜியம் வரை ஈருறுளிப் பயணம்
அடுத்த செய்தியாழ் கைதடியில் வடமாகாண சபைக்கான கட்டடம்!