ஐரோப்பிய பாராளுமன்ற மாநாட்டில் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணயம் பற்றிய பேச்சு

26

‘சுயநிர்ணய உரிமை, ஜனநாயகம், மக்கள் போராட்டம்’ என்ற மக்கள் உரிமைகள் அடிப்படை கொள்கைகளை வலியுறுத்தும் முகமாக IBON FOUNDATION என்ற அமைப்பு ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஒழுங்கு செய்திருந்த மாநாட்டில் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய போராட்டம் பற்றி பேச அனைத்துலக ஈழத் தமிழர் அவைக்கு விடப்பட்ட அழைப்பின்  பேரில் அனைத்துலக ஈழத் தமிழர் அவை கலந்து கொண்டது.

இந்த மாநாட்டின் சிறப்பு பேச்சாளர்ராக அமெரிக்க ஜனநாயக (DEMOCRATS) கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும், பசுமை கட்சி சார்பாக ஜனாதிபதி தேர்தலில் பங்குபற்றிய திருமதி Cynthia McKinney கலந்து கொண்டு அமெரிக்க அரசின் சர்வதேசத்தை ஆளும் நோக்கத்தை கண்டித்;து மக்களின் சுயநிர்ணய உரிமை போராட்டத்தை வலியுறுத்தி பேசினார்.

Dr Hans Koechler Innsbruck பல்கலைகழக ஆய்வாளர் பேசும் போது காலனித்துவப்படுத்;தப்பட்ட நாடுகளின் விடுதலை, சுயநிர்ணய உரிமை என்பன ஐக்கியநாடுகள் சபையின் யாப்பில் எழுதப்பட்டு இருக்கின்றது என்றும், ஆனால் அதை செயல் படுத்;தாமல் இறைமையுள்ள தேசிய நாடுகளை பாதுகாக்கும் அமைப்பாக இன்று ஐநா செயல்படுகிறது என்று பேசினார்.

இந்த மாநாட்டில் பேசிய தமிழ், குர்திஸ்தான், பாலேஸ்தீன, பாஸ்க்ளாந்து நாட்டு பிரதிநிதிகள் பேசும் போது சுயநிர்ணய உரிமையை யாரும் எமக்கு கையில் கொண்டு வந்து தர மாட்டார்கள், அதை நாம் தான் பெறவேண்டும் என்பதையும், அதற்கு முதல் படியாக மக்கள் தமது ஜனநாயக விருப்புகளை வலியுறுத்;த வேண்டும், அந்த ஜனநாயக விருப்புகளை , கவனத்தில் எவரும் எடுக்காவிட்டால், அது மக்கள் போராட்டங்களாகும், அதுவும் கைகூடாத பட்சத்தில் போராட்ட வடிவங்கள் மாறலாம் என்ற அடிப்படையில் பேசப்பட்டது.

அதில் முக்கியமாக மக்கள் அனைவரும் இந்த சிந்தனைக்குள் செயல்பட வேண்டும், மக்கள் ஒற்றுமையின் முன் சர்வதேசம் பணிந்து தான் செல்லவேண்டும் என்றும், மக்கள் இடையே பிரிவினை வாதத்தை வளர்ப்பதை பெரும் ஆயுதமாக உலகம் பயன்படுத்;துகிறது, அதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

இன்று உலகம் புது உலக அமைப்பின் கீழ் உலகமயப்படுத்தலுக்குள் சுயநிர்ணய உரிமை போராட்டங்கள் அழிக்கப்படும் ஆபத்து இருப்பதால் போராட்ட அமைப்புகள் எல்லாம் ஒரு அணியாக நீற்க வேண்டிய  அவசியம்  இன்று உள்ளது என்றும் அதற்கு எல்லோரும் தம்மை தயார் படுத்திக் கொள்ளவேண்டும் என்ற கருத்தை அனைவரும் முன்வைத்தனர்.

அனைத்துலக ஈழத் தமிழர் அவை சார்பில் பிரான்சு தமழீழ மக்கள் பேரவையின் செயல்பாட்டாளர் திரு திருச்சோதி அவர்கள் மக்களின் சுயநிர்ணய போராட்டங்களை பயங்கரவாதப்போராட்டமாக காட்டும் வல்லரசுகளின் செயல்பாடுகள் பற்றி பேசிய போது, ஜனநாயக கோட்பாட்டின்  கீழ் உருவான தமிழர் போராட்டம் ஒரு இனப்படுகொலையுடன் அழிக்கப்பட்டதும், அதே போன்ற உதாரணங்கள் இன்று ரசியாவில் TCHCHENIYA  மக்கள் போராட்டம், BIAFRA, குர்திஸ்தான், திபெத், பாலஸ்தினம் என்று பல இனப்போராட்டங்கள் அழிக்கப்பட்டு இருப்பதையும், இவை இனிமேலும் தொடராமல் தடுக்க நாம் செயல் படவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இந்த நிகழ்வில் சுயநிர்ணய உரிமையும், ஏகாதிபத்திய நாடுகளின் தலையீடு பற்றி இனிஒரு (ஐNஐழுசுரு) இணையதளத்தின் இணைப்பாளர் சபாரத்னம் நாவலனும் கலந்து சிறப்புரை ஆற்றினார்.

இந்த மகாநாட்டில் பிலிப்பைன்சு, குர்திஸ்தான், பாலஸ்தீனம், பாஸ்க்ளாந்து கட்டளான், தென் சஹராவி, தமிழ் மக்களின் போராட்டங்கள் பற்றி பேசப்பட்டது.

முந்தைய செய்திசீமான் – பேரறிவாளன் சந்திப்பு
அடுத்த செய்திதேசத்தின் குயில்கள் 2013 எழுச்சி பாடல் போட்டி