இத்தாலி பலெர்மோ மாநகரில் 15.09.2013 மாலை நான்கு மணியளவில் இத்தாலி ஈழத்தமிழர் மக்களவையும், தமிழ் இளையோர் அமைப்பினரும் இணைந்து நடாத்திய இலங்கை இனவெறி அரசால் தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட கொடூரமான இனப்படுகொலையை வெளிப்படுத்தும் புகைப்படக் கண்காட்சியும் பரப்புரை நிகழ்வுகளும் இடம்பெற்றது. இத்தாலி பலெர்மோ மானகரில் 15.09.2013 மாலை நான்கு மணியளவில் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பினரும் பார்க்கோ உடித்தோற அமைப்பினரும் இணைந்து நடாத்திய பல்லின பன்மொழி கலாச்சார நிகழ்வில், இத்தாலி ஈழத்தமிழர் மக்களவையும் தமிழ் இளையோர் அமைப்பினரும் இணைந்து நடாத்திய சிறிலங்கா இனவெறி அரசால் தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட கொடூரமான இனப்படுகொலையை வெளிப்படுத்தும் புகைப்படக் கண்காட்சியும் பரப்புரை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இத்தாலியின் 39 அமைப்புக்கள் கலந்து கொண்டதுடன், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரதிநிதிகளும் ஈழத்தமிழர் மக்களவைப் பிரதிநிதிகளும் தமிழ் இளையோர் அமைப்பு ஈழத்தமிழர் விளையாட்டுச் சம்மேளனம் மற்றும் உப அமைப்புக்களும் பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்களும் பல்லின மக்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தமிழீழத் தேசியக் கொடியினை சர்வதேச மனித உரிமை அமைப்பின் பலெர்மோ பிரதிநிதி Marco Farina அவர்கள் பெற்றுக்கொண்டு உரையாற்றுகையில், தமிழீழத் தேசியக்கொடியினை சர்வதேசம் அங்கீகரிக்கும் வரை தொடர்ந்து குரல் கொடுப்பேன என்று இந்நிகழ்வு மாநகர ஆணையாளரின் அனுசரணையோடு நடைபெற்றது.
தொடர்ந்து இந்நிகழ்வில் வெளிநாட்டவருக்கான பிரதிநிதி Giusto Catania உரை நிகழ்த்துகையில், தொடர்ந்து எங்களுடைய போராட்டத்தின் நியாயத்தன்மையை புரிந்து கொள்வதாகவும் தொடர்ந்து எங்களுக்காக குரல் கொடுப்பேன் என்றும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இந்நிகழ்வு நடைபெற்ற பூங்காவில் தியாகி திலீபன் ஞாபகார்த்தமாக மரக்கன்றும் நாட்டப்பட்டது.
தொடர்ந்து தமிழ் இளையோர் அமைப்பின் பலெர்மோ பொறுப்பாளர் எட்வேட் ஸ்ரேபனோ அவர்கள் அனைத்து அமைப்பு பிரதிநிதிகளுக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன், நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுற்றன.




