‘நாம் தமிழர் அரசியல் பயிற்சி வகுப்பு” 4 மாவட்டங்கள் இணைந்து நடத்திய எழுச்சிமிகு நிகழ்வு

48

நாம் தமிழர் கட்சியின் திருப்பூர், கோவை, நீலமலை மற்றும் ஈரோடை மாவட்டங்கள் இணைந்து கொள்கை உறவோர் பயிற்சிப் பாசறை கடந்த ஆகத்து 10,11 தேதிகளில் திருமூர்த்தி மலையில் நடத்தப்பட்டது. திருப்பூர் மண்டலச் செயலாளர் கரிகாலன் என்கிற சுப்பிரமணியன்,, உடுமலை பொறுப்பாளர் அருட்செல்வன் மற்றும் கோவை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சந்திரன் ஆகியோர் முன்னின்று நடத்தினர்.

முதலில் தமிழ் மொழி எழுத்து என்னும் தலைப்பில் புலவர் வெங்கிடசாமி தமிழின் பெருமையையும்,எழுத்து ,சொல் இனிமையையும் அழகுபட எடுத்துரைத்தார்.
இதில் தமிழ்மொழி அரசியல் என்ற தலைப்பில் முனைவர் ஆரோகியதாசு அவர்கள் செம்மொழியின் வரலாற்றையும், இன்றைய நிலை பற்றியும் ஒரு நீண்ட உரையை நிகழ்த்தினார்கள்.
அம்பேத்காரும் சமூக நீதியும் என்கிற தலைப்பில் அறிவாணன் உரையாற்றினார். ஈழத்தமிழர் போராட்ட வரலாறு பற்றி தமிழர் தேசிய இயக்கத்தைச் சார்ந்த அய்யா. பரந்தாமன் தெளிவாக விளக்கினார்.
இன்றைய சூழலில் பெண்கள் பங்கு பற்றி பேராசிரியர் சூரிய கலா, மற்றும் திவ்யா ஆகியோர் ஒரு சீரிய உரையை நிகழ்த்தினார்கள்.
நதிசீர்ச்சிக்கல் பற்றி நாம் தமிழர் கட்சியின் தஞ்சை மண்டலப் பொறுப்பாளர் வழக்கறிஞர் நல்லதுரை அவர்கள் தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கிற நதிநீர்ச்சிக்கல்களின் மூலத்தையும் தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் தமிழர்க்கு செய்கின்ற துரோகங்களையும் பட்டியலிட்டார்.
பேராசிரியர் பால் நியுமனின் ஈழ விடுதலைப் போராட்டம் பற்றிய காணொளி, பெங்களூர் நாம் தமிழர் பாலாசி அவர்கள் கருத்துரையுடன் காண்பிக்கப்பட்டது
அடுத்து, கோவை மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரன், குறும்படங்கள் மற்றும் வீதி நாடகங்கள் மூலமாக மக்களிடம் பரப்புரையும் செய்திகளை கொண்டு செல்லும் முறைகளையும் விளக்கினார்.
அன்று இரவு “விருப்பம் போல பேசு” நிகழ்ச்சியில் ஒவ்வொருவருக்கும் தான் விரும்புகிற செய்திகளை மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கான பயிற்சிகள் கொடுக்கப்பட்டது.
இரண்டாம் நாள் காலை, தமிழ்த்தேசியத்தில் சாதீயம் என்கிற தலைப்பில் எழுத்தாளர் யாழன் ஆதி, இங்கு நிலவுகிற சாதி முறைகளையும், அதைக் களையும் வழிகளையும் குறிப்பிட்டுப் பேசினார்.
அடுத்து மருத்துவ அரசியல் பற்றி மனித நேய மருத்துவர் மன்னார்குடி பாரதிச்செல்வன் அவர்கள் நோய்கள் பற்றியும், வராமல் காக்கும் முறைகளையும், வியாபாரமாகிக் கொண்டிருக்கிற இன்றைய நிலையையும் விரிவாக எடுத்துரைத்தார்.
சுற்றுச்சூழல் அரசியல் என்கிற தலைப்பில் பூவுலகின் நண்பர்கள் சார்ந்த வெற்றிச்செல்வன் அவர்கள் நம்மை பாதிக்கின்ற கூடங்குளம் அணு உலை, நெகிழிப்பைகள்,மரபணு மாற்றுப் பயிர்கள் மற்றும் நீர், காற்று ,மண் மாசுபடுதலையும்,அதன் கேடுகளையும் விரிவாக எடுத்துரைத்தார்.
மார்க்சியம் – ஒரு சமூக அறிவியல் என்கிற தலைப்பில் அய்யா சுபாசு கிரிட்டினசாமி பொதுவுடைமைத் தத்துவத்தையும்,அதன் அடிப்படைகளையும் விரிவாக எடுத்தியம்பினார்.
இந்திய தேசியத்தின் பொய்மை என்கிற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் அறிவுச் செல்வன் நம்மை சுரண்டுகிற தேசியத்தின் பல்வேறு பொய்மைகளை விரிவாக விளக்கினார்.
இறுதியாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில அமைப்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் கருத்துருவாக்கம் என்கிற தலைப்பில் கட்சியின் கொள்கைகளையும், இலட்சியங்களையும் அதை முன்னெடுக்கும் வழிகளையும் விரிவாக விளக்கினார்…
கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் சுப்பிரமணிய சுவாமிக்கு கருப்புக்கொடி காட்டிச் சிறைசென்ற தோழர்களுக்கு மேடையில் பாராட்டு தெரிவிக்கபட்டது.
மிக முக்கியமான கொள்கைப் பயிற்சிப் பாசறையில் இரண்டு நாட்கள் கலந்து கொண்ட உறவுகளுக்கு திருப்பூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் சமரன் பாலா, சண்முக சுந்தரம், மோகன், முருகானந்தம், காங்கேயம் சண்முகம்,நீலமலை மாவட்டப் பொறுப்பாளர் ஆனந்து, ஈரோடைப் பொறுப்பாளர் வழக்கறிஞர் செயராசு, சேலம் மாவட்டச் செயலாளர் அருண்,கோவை மருத்துவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.
இந்நிகழ்வில் களப்பணி செயது மிகசிறப்பாக நடத்திய பாபு ராசெந்திரப் பிரசாத் , மாணவர் பாசறை சிவபாலன்,சந்திரன், சதீசு,கண்ணதாசன்,தம்பி சிவா,பெதவை தீபன்,மரக்கடை செந்தில், பொள்ளாச்சி அறிவழகன் ஆகியோருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
முந்தைய செய்திமெட்ராஸ் கபே திரைப்படத்தை திரையிட தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது
அடுத்த செய்திவடசென்னைக் கிழக்கு கிளை திறப்பு நிகழ்ச்சி