சேலம் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம்

27

நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டம்-ன் கலந்தாய்வுக் கூட்டம் ஓமலூரில்  17.03.2013 ஞாயிறு அன்று காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.இக்கூட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சி தம்பிகள் கலந்து கொண்டு கலந்தாய்வு கூட்டத்தை  சிறப்பித்தனர் என்பது குறிபிடத்தக்கது.

 

இக்கூட்டத்தில் கடலூரில் நடக்கவிருக்கும் நாம் தமிழர் கட்சியின் நான்காம் ஆண்டு துவக்கவிழா மே-18 குறித்தும், அதற்கான பிரச்சாரம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்தும் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பட்டது.

 

கேரளாவில் இருந்து கர்நாடகா வரை செல்லும் கெயில் நிறுவனத்தின் எரிவாயு பதிப்பு, தமிழக விவசாயிகளின் விளைநிலங்கள் வழியாக எடுத்து செல்லப்படுவதை கண்டித்தும், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் அத்திட்டத்தை விவசாய நிலங்கள் பதிக்காத மாற்று வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்றும், இது குறித்து விவசாயிகளால் போராடப்படும் அனைத்து போராட்த்திற்கும் நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரவளிக்கும் என்பதையும் நாம் தமிழர் கட்சி சேலத்தின் சார்பாக முடிவெடுக்கப்பட்டது.

 

மேலும் கட்சியின் வளர்ச்சி நிதி குறித்தும் 1000 பேர் 1000 ரூபாய் என்னும் திட்டம் குறித்தும் இதில் பேசப்பட்டது.