சேலம் மாவட்ட சட்ட கல்லூரி மாணவர்களின் உண்ணாநிலை போராட்டம்

77

சேலம் மாவட்ட மத்திய சட்ட கல்லூரி மாணவர்கள் கடந்த சில நாட்களாக உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் கோரிக்கைகள்:

1.    தனி தமிழீழம் ஒன்றே தீர்வு.

2.    இனப்படுகொலை செய்த சிங்கள இனவெறி அரசு குறித்த ராசபக்சேவை    சர்வதேச நீதி மன்றத்தில் தண்டிக்கப்பட வேண்டும்.

3.    தமிழர்களை கொன்று குவித்த சிங்கள இனவெறி அரசு குறித்த      ராசபக்சேவை சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்கப்படவேண்டும்.

4.    சிங்கள இனவெறி குறித்த இலங்கை ராணுவத்தினர் இன்று வரை    தமிழக மீனவர்களை கொன்று குவிப்பதை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

5.    இலங்கைக்கு எதிராக அமெரிக்க கொண்டு வரும் தீர்மானத்தின்      உண்மை நிலை கண்டறிந்து சர்வதேச அளவில் ஈழதமிழர்களுக்கு நீதி கிடைக்க அத்தீர்மானத்தை மாற்றி, திருத்தும் செய்து இந்தியாவே   முன்மொழிய வேண்டும்.

6.    தனித்தமிழீழம் அமைய வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்.

இந்த கோரிக்கைகளை முன்வைத்து போராடி கொண்டிருக்கும் சேலம் மத்திய சட்ட கல்லூரி மாணவர்களுக்கு வலு சேர்க்கும் வகையில் சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சி.அருண் தலைமையில் நேற்று மாலை 6 மணி அளவில் நேரில் சென்று ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதில் 100 க்கும் மேற்பட்ட சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சி தம்பிகளும் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திசேலம் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திஉண்ணாநிலை போராட்டம் 20-3-2013