27 -06 -2012 அன்று மாலை 4 மணியளவில் திருச்சி தொடர்வண்டி நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சி சார்பாக “நடுவண் அரசே தமிழகத்திற்கு சொந்தமான கச்சதீவை திரும்ப பெறு ” என்பதை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது . மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா.பிரபு அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி யை சேர்ந்த சேது மனோகரன் ,கண்ணன்,துரைமுருகன் தாமரை மன்னன்,மணி,மகிழன் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.. ஆர்பாட்டத்தில் கச்சதீவை மீட்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன..
“இன்றைய தினம் தமிழகத்திற்கு கருப்பு தினம் “. ஆம் முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் 27 .06 .1974 ஆண்டு இதே தினத்தில் தான் தமிழகத்திற்கு சொந்தமான கச்சதீவு இலங்கைக்கு தாரை வார்த்துக்கொடுக்கபட்டது.
அந்த ஒப்பந்தத்தின்படி தமிழக மீனவர்களை மீன் பிடிக்க அனுமதிப்பதில்லை .கச்சத்தீவில் வலையை உலர்த்த அனுமதிப்பதில்லை .மீனவர்கள் ஓய்வு எடுக்க அனுமதிப்பதில்லை தொடர்ந்து மீனவர்கள் விரட்டி அடிக்கப்படுகின்றார்கள் ,வலை ,தொலைபேசி ,திசைகாட்டும் கருவி, நகை ,பணம் ,மீன்கள் முதலியவற்றை தமிழ க மீனவர்களிடம் கொள்ளையடித்துச் செல்கிறார்கள் சிங்கள கடற்படை யினர் . இவைகள் எல்லாவற்றையும் விட இது வரையில் 534 தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் படுகொலை செய்யப்பட்டார்கள் .இதனை தடுக்க வேண்டிய நடுவண் அரசு தொடர்ந்து வேடிக்கைப் பார்த்துவருகிறது. இதனை கண்டும் காணாமல் தமிழர்களுக்கு எதிரான நடுவண் காங்கிரசு அரசின் போக்கை கண்டித்தும் தீர்வாக கச்சதீவை மீட்க வலியுறித்தியும் ஆர்பாட்டம் நடைபெற்றது..
முகப்பு கட்சி செய்திகள்