24.6.2012 அன்று திருவள்ளூர் மாவட்டம் செல்லம்பட்டரை கிராமத்தில் நடந்த காணொளி பரப்புரை பயணம்

31

திருவள்ளூர் பேரம்பாக்கம் அருகில் உள்ள செல்லம்பட்டரை என்ற கிராமத்தில் 24.6.2012 அன்று மாலை திராவிட ஆட்சியில் தமிழர்களின் நிலைகுறித்து தெருமுனை பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.அதனை தொடந்து கிராமத்தின் முதன்மையான பகுதியில் பெருமாள் கோவில் அருகில் “ஓயாத அலைகள் ” பறைக்குழு பறைஇசை முழங்க கூட்டம் கூடியது, நாம் தமிழர் காலத்தின் கட்டாயம் என்று இளந்தமிழன்,சிவசக்தி,சிவசங்கர்,ரமேஷ் (எ)இரணியன் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர் பிறகு ஈழத்தில் சிங்கள இனவெறி அரசு நடத்திய கொலைக்களம் காணொளி காட்சி திரையிடப்பட்டது,முடிவில் விழ விழ எழுவோம் பாடல் திரையிட கிராமமக்கள் இவ்வளவு கொடுமையா? என்றபடி பார்த்தனர். முடிவாக இத்தனை கொடுமைக்கும் காரணம் மத்தியில் நம்மை ஆளும் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமையும் என்றும் அதற்கும் மேலாக நம் உறவுகள் கொல்லப்படும்போது வாய்முடி சொந்த நலனை பாதுகாத்த திராவிட துரோகிகள் தன் இதற்கு காரணம் என்று விளக்கினோம் இத்துடன் கூட்டம் இனிதே முடிந்தது.செல்லம்பட்டரை கிராமத்தின் நமது போராளிகள் நமக்கு விருந்தளித்து உபசரித்தனர். இது போன்ற நிகழ்வுகளை உங்கள் கிராமங்களில் கொண்டுசெல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம்.எங்களை தொடர்புகொள்ள:9600709263,8883930008,9629992589,7373432219

முந்தைய செய்திகாணொளி பரப்புரை – திருவள்ளூர் 24-06-2012
அடுத்த செய்தி27 – 06 – 2012 அன்று திருச்சியில் நடந்த “கச்சதீவை மீட்க கோரும் ஆர்பாட்டம்”