22ம் திகதி பிரித்தானியப் பாராளுமன்றில் இலங்கை குறித்து விவாதம்!!

23

வரும் 22ம் திகதி(புதன்கிழமை) பிரித்தானியப் பாராளுமன்றில் இலங்கை நிலை குறித்து விவாதம் ஒன்று நடைபெறவுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இல்பேஃட் எம்.பி லீஸ்கொட் இந்தக் கோரிக்கையை சபாநாயகரிடம் விடுத்துள்ளார் எனவும், இதற்கு அமைவாகவே இந்த விவாதம் நடைபெறவுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழர்களுக்கு ஆதரவான எம்.பீக்கள் இதில் கலந்துகொள்ள இருக்கும் நிலையில், இலங்கை தூதுவராலயம் தமக்குச் சார்பான எம்.பீகளை இந்த விவாதத்துக்கு அனுப்ப முழு மூச்சாக இறங்கியுள்ளது எனவும் அறியப்படுகிறது.

எனவே தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இருக்கும் எம்.பீகளை, தமிழர்கள் ஒன்றிணைத்து இவ்விவாதத்தில் பங்கெடுக்கச் செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.

அத்தோடு பிரித்தானியப் பாராளு மன்றில் இலங்கை குறித்து விவாதம் ஒன்று நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கையெழுத்து வேட்டையும் நடைபெற்று வருகிறது. நாம் அனைவரும் ஒன்று திரண்டு இதில் கையெழுத்து இடுவதம் மூலம் நடைபெறும் மற்றும் நடைபெறப்போகும் விவாதங்கள் திறம்பட நடக்க ஏதுவாக கையொப்பங்களை இடுவோம்.

கையொப்பங்களை இட :http://epetitions.direct.gov.uk/petitions/14586

நன்றி – அதிர்வு இணையத்தளம்
முந்தைய செய்திநாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நாம் தமிழர் கட்சி நடத்திய முத்துகுமார் வீரவணக்க நிகழ்வு – நிழற்படங்கள்!!
அடுத்த செய்திபூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளோரை உடனடியாக விடுவிக்க வேண்டும்